மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய பிக்பாஸ் ஜோடிகள் : உற்சாகமாக உறுதி செய்ய நட்சத்திரங்கள்

Biggboss Jodigal Relity Show : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதை பிக்பாஜ் நட்சத்திரங்கள் உற்சாகாக பதிவிட்டுள்ளனர்.

Biggboss Jodigal Reality Show : விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஷிட் ஷோ பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி இதுவரை 4- சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால், இதை பயன்படுத்திக்கொள்ள பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை நடத்தி நடத்தி வருகிறது.   

அந்த வகையில் தொடங்கப்பட்டது தான் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழச்சி. சில எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் கொரோனா கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிறுத்தப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஜித், கேபி உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஆனாவ் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால், அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதுஇ இது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “Back to #bbjodigal set…shoot going on with all safety protocols being followed” என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் சோம், ஆஜித், சம்யுக்தா உள்ளிட்டவர்கள் கேரவனில் நடனமாடி ரகளை செய்திருக்கும் வீடியோவும் தற்போது வெளியாகி வைரல் ஆகி உள்ளது. பிக்பாஸ் ஜோடிகள் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் வனிதா விஜயக்குமார் செட்டில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil bigg boss stars confirm to bigg boss jodigal reality show shooting again

Next Story
Vijay TV serial; அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் பாரதியை தடுக்க திட்டம் போடும் வெண்பா…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com