Biggboss Cintestant Raju Jayamohan Lifestory : ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 7 மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். 13 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சி 93-வது நாளை கடந்துள்ளது.
பிரியங்கா நிரூப், ராஜூ,தாமரைச்செல்வி, சிபி, அமீர் பாவனி ஆகிய 7 போட்டியாளர்கள் வெற்றியாளர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், டிக்கெட் டு ஃபைனலே டாஸ்கை வென்ற அமீர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் மீதமுள்ள 6 பேரில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் முக்கியமாக விஜய் டிவி பிரபலமாக ராஜூ மற்றும் பிரிங்கா கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை என்று சொல்லாம். இதில் பிரியங்கா தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில நன்கு பிரபலமானவர். அது சமயம் ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புதான் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக வலம் வந்தார். தமிழகத்தின் தென்பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜூ விஸ்காம் முடித்துவிட்டு சினிமா ஆசையுடன் சென்னை வந்துள்ளார்.
பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு இயக்குநர் பாக்யராஜூவிடம் உதவியாளராக சேர்ந்த ராஜூ, அதன்பிறகு விஜய் டிவியின் ஹிட் தொடரான கனா காணும் காலங்கள் தொடரில், கல்லூரிசாலை போஷனில் நடித்தார். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கேரக்டரில் மெயின் ரோலில் நடித்த சரவணனின் நண்பராக நடித்தார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஜூ தொடர்ந்து விஜய் டிவியின் ஆண்டாள் அழகர், பாரதி கண்ம்மா உள்ளிட்ட சீரியலில்களில் நடித்திருந்தார். மேலும் கவின் ஹீரோவாக அறிமுகமான நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ராஜூ தனது பயணத்தை சின்னத்திரையில் தொடர்ந்தார்.
பல முயற்சிகளை மேற்கொண்ட ராஜூ தற்போது சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். கல்லூரி காலத்தில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஒரு சில குறும்படங்கள இயக்கியுள்ள ராஜூ, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்து வந்த பாதை டாஸ்கில் தான் இயக்கிய முதல் குறும்படமான அ.அ.அ.ஆ என்ற படத்தை குறித்து பேசியிருந்தார். கல்லூரியில் இந்த படம் திரையிடும்போது இயக்குநர் பாக்யராஜ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று படத்தை பார்த்து பாராட்டியதாகவும் ராஜூ தெரிவித்துள்ளார். தற்போது இந்த குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil