Tamil Bigg boss 7 : பிரதீப்-க்கு கிஸ் கொடுத்தாரா ஐஷூ... இது எப்போ நடந்துச்சு?

ஐஷூ ரவீனா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் கமல் சார் வரும்பொது மேக்கப் போட்டு எங்களை காக்க வைக்கிறது என்று பிரதீப் கூறியுள்ளார்.

ஐஷூ ரவீனா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் கமல் சார் வரும்பொது மேக்கப் போட்டு எங்களை காக்க வைக்கிறது என்று பிரதீப் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pradeep Aishu

பிக்பாஸ் பிரதீப் - ஐஷூ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதீப் ஐஷூ முத்த விவகாரம் தற்போது பெரும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் அடுத்த பிரச்சனை அமலுக்கு வந்துள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், ஒரு சிலர் ஸ்மால்பாஸ் வீட்டிலும் ஒருசிலர் பிக்பாஸ் வீட்டிலும் வசித்து வருகின்றனர். அதேபோல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே லவ் ட்ராக் தொடங்கி விட்ட நிலையில், இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே மோதலுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.

இதனிடையே நேற்றைய எபிசோட்டின் இறுதியில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை அழைத்த பிக்பாஸ், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் இந்த 3 வாரங்களில் எப்படி ஃபர்பாம் செய்தார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று கூறுகிறார். இதை கேட்ட ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப், யுகேந்திரன், விசித்ரா ஆகியோர் குறித்து தனது கருத்தை சொல்கிறார். அதன்பிறகு, ஐஷூ ரவீனா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் கமல் சார் வரும்பொது மேக்கப் போட்டு எங்களை காக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.

இறுதியாக ஐஷூவை பிடித்து ஐஷூ நீ யாருனே எனக்கு தெரியல.. ஒருநாள் சார்னு சொல்ர, ஒருநாள் அண்ணானு சொல்ர அப்புறம் கிஸ்லாம் கொடுக்கற, என்று சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். இதை கேட்ட ஐஷூ நான் எப்போ முத்தம் கொடுத்தேன் என்று கேட்க, அதன்பிறகுதான் அது ப்ளையிங் கிஸ் என்று தெரிகிறது. அது ஒரு ஃபன்காக பண்ணது அதுக்குபோய் இப்படி பேசுறீங்களே என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

மேலும் நீங்கள் இப்படி சொல்வதை வெளியில் இருப்பவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள், நீங்கள் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்கிறார். அதன்பிறகு பிரதீப் சாரி அவர் ப்ளையிங் கிஸ்தான் கொடுத்தாங்க, அது மட்டும் இல்லாம அவங்க என்னை அண்ணனாதான் பாக்குறாங்க. நானும் அவரை தங்கையாக தான் பார்க்கிறேன் என்று கூறி ட்விஸ்ட் கொடுத்துவிட்டார். இதனால் பரபரப்பாக தொடங்கிய எபிசோடு புஸ்வானமாகிவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Bigboss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: