தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் 9-வது நாளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது
Advertisment
தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் இதவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்காக மாறாக 2 வீடுகள், 2 நாமினேஷன் ப்ராசஸ் என வித்தியாசமான அரங்கேறியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே படிப்பு தொடர்பாக வனிதாவின் மகள் ஜோவிகா நடிகை விசித்ரா இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு அதிகமான நிலையில், வார இறுதியில் கமல்ஹாசன் இந்த மொதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல் வாரத்தின் எலிமினேஷனில் அனன்யா ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை, தன்னால் இனிமேல் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி தானாக முன் வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், 9-வது நாளுக்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ப்ரமோவில் இந்த வார கேப்டனான சரவண விக்ரமிடம் போட்டியாளர்கள் அனைவரும் சமையல் குறித்து கேள்வி கேட்கிறன்றனர். இதில் மாயா நான் ஆர்டர் பண்ணேன் வரவே இல்லை என்றும், முட்டை உடைத்து ஒன்றாக கலக்கிவிட்டால் ஆஃப்பாயில் எப்படி வரும் என்று வினுஷா தேவி கேட்கிறார். அதேபோல் ஜோவிகா நான் ப்ரெட் கேட்டேன் வரவே இல்லை கிடைக்குமா கிடைக்காதா என்று கேட்டுள்ளார். அதேபோல் தப்பே பண்ணாம நான் கைக்கட்டி நிக்கனுமா என்று ஒருவர் கேட்கிறார்.
நேற்றைய எபிசோட்டில், நடிகர் விஷ்ணு இந்த வீட்டில் நீ கேப்டனா அல்லது எல்லாரும் கேப்டனா என்று சரவண விக்ரமிடம் கேள்வி கேட்டிருந்த நிலையில், இன்று போட்யாளர்கள் அனைவருமே அவரிடம் கேள்வி கேட்கின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“