பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நிக்சன் எல்லை மீறும்போது அமைதியாக இருந்த ஐஷூ எங்களுக்கு வேண்டாம் பழைய ஐஷூதான் வேண்டும் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பெண்கள் பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் பல சம்பங்கள் அரங்கேறி வருகிறது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தூங்குவதற்கு பயம் என்று மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் உரிமை குரல் எழுப்பி பிரதீப்பை வெளியேற்றிவிட்டனர்.
அதே சமயம் நேற்று நிக்சன் விணுஷாவை பாடி ஷேமிங் செய்த விஷயம் தெரிந்தும் அவர்கள் 4 பேருமே அமைதியாக இருந்தனர். இதனால் பிரதீப் ப்ளான் பண்ணி வெளியேற்றப்பட்டாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வரும் நிலையில், எங்களுக்கு பழைய ஐஷூதான் வேண்டும் இந்த ஐஷூ வேண்டாம் என்று அவரின் அம்மா தெரிவித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் மாயா பூர்ணிமா மற்றும் ஜோவிகா ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐஷூ, தனது தனித்தன்மையை இழந்துவிட்டதாக விசித்ரா அர்ச்சனா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். இதனிடையே ஐஷூவின் அம்மா தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/A41hMYG041hLR0E6Dqo3.jpg?dpr=1.0&q=70&w=700)
இந்த பதிவில், ’எல்லாவற்றையும் உணர்ந்து நீ, நீயாகவே இருக்க வேண்டும் ஐஷு, இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் விரும்புகிறோம், உண்மையான கண்கள் எது? பொய்யான கண்கள் எது? என்பதை நீ உணர்வாய் என நம்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“