பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் ஆளாக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது டாட்டூதான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே சண்டையும் சர்ச்கைளும் வெடிக்க தொடங்கியது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் வழக்கத்திற்கு மாறாக இந்த நிகழ்ச்சியில் 2 வீடுகள் உள்ளன. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே டாஸ்க் என்றும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமையல், க்ளீனிங் வொர்க் மட்டுமே பண்ண வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2 வீடுகள் 2 எலிமினேஷன்கள் என இந்த 7-வது சீசன் வித்தியாசமாக இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், முதல் நாளுக்கான எலிமினேஷன் நேற்று நடந்தது. இதில் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கிய 2-வது நாளே அவரது டாட்டூ குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இவர் டாட்டூவுக்காகத்தான் எலிமினேட் செய்யப்பட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், எலிமினேட் ஆகி வெளியில் வந்த அனன்யா தொகுப்பாளர் கமல்ஹாசனிடம், நான் இன்னும் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைத்து அதற்காக நான் செய்ய வேண்டியதை செய்தேன். நான் டாட்டூ போட்டதால் தான் எலிமினேட் செய்துவிட்டார்கள் போல என்று கூறிய நிலையில், இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், டாட்டூ காரணம் இல்லை. வேண்டுமென்றால் இப்போது போய் இன்னும் ரெண்டு டாட்டூ போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“