பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போதைய கேப்டன் மாயாவுக்கும் ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரத்திற்கு நாப்கின் கூட தர முடியாதா என்று விசித்ரா கேட்டுள்ளது பிக்பாஸில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக மாயா பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே கடந்த வாரம், மக்கள் ஆதரவு பெற்ற போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மாயா, ஜோவிகா, மற்றும் பூர்னிமா உள்ளிட்ட சிலர் உரிமை குரல் எழுப்பி, பிரதீப்-ல் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தொகுப்பாளர் கமல்ஹாசன், பிரதீப்பிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசனின் இந்த முடிவு சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், பிரதீப்-க்கு ஆதரவு குரல் அதிகரித்துள்ளது.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் செய்த பெண் போட்டியாளர்களை கடுமையான விமர்சித்த விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும, ஒருவரின் வாழ்க்கையை வீணடித்துவிட்டீர்கள் என்று மாயா, ஜோவிகா, பூர்னிமா ஆகியோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தனர். இதற்கு பழி வாங்கும் வகையில் கேப்டனாக உள்ள மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது என்று சொல்கிறார்.
இன்று காலை வெளியான முதல் ப்ரமோவில், விசித்ரா டூத் பிரஷ் கேட்க, கையால் விலக்குங்கள் என்று சொல்லிவிட்டு சென்ற மாயா, தற்போது சானிட்ரி நாப்கின் கொடுக்கவும் முடியாது என்று சொல்கிறார். ட்விட்டரில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், சானிடரி பேட்ஸ் கூட டைம் எடுத்துதான் கொடுப்பீங்களா என்று விசித்ரா கேட்க, அதை கொடுப்போங்க இருங்க என்று ஜோவிகா பதில் சொல்கிறார். இதை கேட்டு அர்ச்சனா விடுங்க மேம் என்று சொல்ல, நீ இரு என்று சொல்லும் விசித்ரா, பல் தேய்க்க ப்ர்ஷ் கொடுக்கல ரைட், சானிட்ரி நாப்கின் கூடவா கொடுக்க மாட்டாங்க என்று கேட்க, ரவீனா நாப்கின் எடுத்து வந்து அர்ச்சனாவிடம் கொடுக்கிறார்.
அதன்பிறகு ரவீனா ஐஷூ நாப்கின் குடுடி என்று சொல்ல, அங்கிருந்து எந்த ரெஸ்பாஸ்சும் இல்லை. இவர்களுக்கு காது கேட்குதா இல்லையா என்றே தெரியவில்லை என ரவீனா சொல்ல, நாப்கின்க்கு கூட இவர்களிடம் கெஞ்ச வேண்டுமா என்று விசித்ரா கேட்கிறார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு கருதி பிரதீப் வெளியேற்றப்பட்ட நிலையில், இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“