Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதல் சந்திப்பு... சீரியல் நடிகையுடன் தினேஷ் : வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தினேஷ் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ரச்சிதா குறித்து பேசியிருந்த நிலையில், வெளியில் இருந்து ரச்சிதாவும் அதற்கான தனது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Dinesh And Premi Venkat

பிக்பாஸ் போட்டியாளர் தினேஷ் - சீரியல் நடிகை பிரேமி வெங்கட்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று 4-வது இடம் பிடித்த சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி பிரபல சீரியல் நடிகை ஒருவருடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

தினேஷ் கோபால்சாமி தமிழில் சீரியல் நடிகர். கடந்த 2010 ஆம் ஆண்டு மஹான் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவாநாச்சியார்புரம் மற்றும் மிஸ்டர் மிசஸ் கிலாடிஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 2013-ம் ஆண்டு புது கவிதை என்ற தொடரில் நடித்த இவர், பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த ரச்சிதா மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.

சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்த நிலையில்,  கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரச்சிதா மகாலட்சுமி போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கள் சொந்த கதையை சொல்லும்போது, ரச்சிதா தினேஷ் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறும்வரை தினேஷ் குறித்து எந்த வார்த்தையும் பேசவில்லை.

அதே சமயம் நடப்பு ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த தினேஷ், தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ரச்சிதா குறித்து பேசியிருந்த நிலையில், வெளியில் இருந்து ரச்சிதாவும் அதற்கான தனது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தார், ஆனாலும் இந்த நிகழ்ச்சியில், தான் சாம்பியன் பட்டம் வென்று, அதை ரச்சிதாவுக்கு சமர்பித்து எனது காதலை நிரூபிப்பேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக தினேஷ் பிக்பாஸ் 7-வது சீசனில் 4-வது இடம் பிடித்திருந்தார். ஆனாலும் தான் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், மக்கள் தன் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ளது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தினேஷ் தற்போது சீரியல் நடிகை பிரேமி வெங்கட்டை சந்தித்துள்ள நிலையில், இவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினேஷ் ரச்சிதா ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பரான பிரேமி வெங்கட், கடந்த சீசனில் ரச்சிதாவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த நிலையில், இந்த சீசனில் தினேஷ்க்கு தனது ஆதரவை தொடந்து வழங்கி வந்தார். தினேஷ் ரச்சிதா இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் இது குறித்து அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரேமி வெங்கட் தெரிவித்திருந்தார். தற்போது தினேஷ் பிரேமி வெங்கட் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

biggboss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment