பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேஷன் ஆனது யார் என்பது குறித்தும் அவர் வாங்கிய சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் 7-வது சீசன் தொடங்கியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 4 வாரங்கள் முடிந்த பிறகு 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்தனர். கானா பாலா அர்ச்சனா தினேஷ், அன்ன பாரதி ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் உள்ளே வந்தனர்.
இதில் முதல் வாரத்தில் அன்னபாரதி வெளியேற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்டரியாக வந்த தினெஷ் அர்ச்சனா இருவரும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், தொடக்கத்தில் அர்ச்சனா அழுகாட்சியாக இருந்தாலும், தற்போது அவர் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடி வருகிறார். ஆனால் ஆர்.ஜே பிராவோ, கானா பாலா இருவரும் தங்கள் வேலைகளை மட்டுமே பார்த்து வந்தனர்.
இதனிடையே இன்று கானா பாலா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஒருநாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் என்று பேசப்பட்டு அழைத்து வரப்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் அக்ஷையா வெளியாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கானா பாலா வெளியாகியுள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் கமல் மாயா டீம்க்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“