Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதல் பட வாய்ப்பு : பிரதீப் ஆண்டனி வெளியிட்ட அட்வாஸ் செக்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு சம்பவம் தான்.

author-image
WebDesk
New Update
Pradeep Antony I

பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி தற்போது தான் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாகவும், இதற்காக தான் வாங்கிய முன் பணத்திற்கான செக்கை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு அறிவித்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் 7-வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் அர்ச்சனா வின்னராக அறிவிக்கப்பட்ட நிலையில், மணி ரன்னராகவும், மாயா 3-வது இடமும், தினேஷ் 4-வது இடமும் பிடித்தனர்.

மேலும் இந்நிக்ச்சியில் பங்கேற்ற, பூர்ணிமா, ஜோவிகா விஜயகுமார், ஐஷூ, ரவீனா, விசித்ரா உள்ளிட்ட பலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு சம்பவம் தான். இவரால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, ஐஷூ உள்ளிட்டோர் உரிமைக்குரல் எழுப்பியதை தொடர்ந்து பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிக்பாஸ் வீட்டில், விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்ட சிலர் பிரதீப்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் உள்ளே எப்படி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி, பிரதீப்க்கு ஆதாரவு தெரிவித்திருந்தனர். அதேபோல் கமல்ஹாசன் பிறந்த நாளில், எதையுமே தீர விசாரிக்க வேண்டும் என்று பதிவிட்டு பிரதீப் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதீப், தனக்கு அளிக்கப்பட்ட ரெட் கார்டுடன், தனது பெண் தோழிகளுடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் முதல் ஆளாக பிரதீப், பட வாய்ப்பு பெற்றுள்ளார்.

இந்த பட வாய்ப்புக்காக தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கான செக்கை பதிவிட்டு, இந்த வருடம் கொஞ்சம் நடிச்சு காசு சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அட்வான்ஸ் வாங்கிட்டேன். படம் பொருமையாதான் வரும்..எப்போ வரும்லாம் கேக்காதீங்க..வரும்போது முடிஞ்சா தியேட்டர்ல பாருங்கஎன்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment