பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை பெரிதாக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத போட்டியாளராக இருக்கும் சரவண விக்ரம், தற்போது நெட்டிசன்களின் மீம்ஸ் மெட்டீரியாலாக மாறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இதுவரை 6 வாரங்கள் முடிந்துள்ள நிலையில், மாயா பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் ஒரு க்ரூப்பாகவும், விசித்ரா அர்ச்சனா தினேஷ் உள்ளிட்டோர் ஒரு க்ரூப்பாகவும் விளையாடி வருகின்றனர். இந்த 2 க்ருப்புக்கும் பொதுவாக ஒருசிலர் பேசி வரும் நிலையில், ஒரு சில போட்டியாளர்கள் தங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதே தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்த மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்த வினுஷா தேவி, அக்ஷையா, பிராவோ ஆகியோர் குறித்து மீம்ஸ்கள் விமர்சனங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சமீபத்தில் விணுஷா தேவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தற்போது நெட்டிசன்களின் பார்வை சரவண விக்ரம் பக்கம் திரும்பியுள்ளது. நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து பெரிதாக எதுவும் செய்யாத சரவண விக்ரம், தான் கேப்டனாக இருந்தபோது கூட தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது.
அதே சமயம் கடந்த வாரம் சரவண விக்ரம் பூர்ணிமாவிடம் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. இதில் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்றும், கட்டிப்பிடிப்பது குறித்தும் பேசியிருந்தார். அதன்பிறகு இவரை பற்றி பெரிதாக எதுவும் இல்லாத நிலையில், அமைதியின் சின்னமாக பிக்பாஸ் வீட்டில் நடமாடி வருகிறார் விக்ரம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவ்வளவு பேச்சு பேசுவியேப்பா இப்போ என்னாச்சி, அமைதியா இருக்க அத்தனையும் நடிப்பா என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஒரு பகுதியினர் கேட்டு வருகின்றனர்.
மற்றொரு பகுதியினர், முதல் சீசனில் அமைதியாக இருந்து ரித்திகா சாம்பியனாக மாறியது போன்று இந்த சீசனில் சரவண விக்ரம் அமைதியாக இருந்து சாம்பியனாக வருவார் என்று கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் சரவண விக்ரம் பிக்பாஸ் வீட்டில் இனிமேலாவது தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடுவரா அல்லது அமைதியா இருந்தே கப் அடிச்சிடலாம் என்று யோசிப்பாரா என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“