New Update
/indian-express-tamil/media/media_files/WbUHDlepmdvxw4nayu5t.jpg)
பிக்பாஸ் 7 : பூர்ணிமா - சரவண விக்ரம்
பிக்பாஸ் 7 : பூர்ணிமா - சரவண விக்ரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் மோதலின் உச்சக்கட்டமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம், பூர்ணிமாவிடம் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. ஸ்மால் பாஸ் vs பிக்பாஸ் என நாள் தோறும் மோதலின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரவண விக்ரம் தனியாக பேசிக்கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதில் தனது ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இந்த சீசனில் டைட்டில் வின்னராக தான் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களும், கிண்டல்களும் கிடைக்கும் அளவுக்கு வைரலாக பரவியது. இதனிடையே தற்போது சரவண விக்ரம், பூர்ணிமாவுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஒரு மாதிரி இருந்தேன். ஆனால் நீ கட்டிப்பிடித்த பின் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது. அது என்ன என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறியிருந்தார்.
#Vikram to #Poornima : Nee hug kudukum podhu warm ah feel achu#BiggBossTamil7 #BiggBoss7Tamil#BiggBossTamil pic.twitter.com/0pVLtV3E70
— Akshay (@Filmophile_Man) November 10, 2023
சரவண விக்ரமின் இந்த பேச்கை கேட்ட பூர்ணிமா மகிழ்ச்சியில் அவரின் கையை பிடித்து, சிரிப்பை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சரவண விக்ரம் குறித்து பூர்ணிமா பெருமையாக பேசும் வீடியோகள் இடம் பெற்றுள்ளது. இதில் நீ பண்ண மாட்டேனு நினைச்சேன். ஆனால் டக்குனு நீ கயிறு எடுத்து கட்டுன உடனே வாவ் என்று சொல்ல தோணுச்சு என்று பூர்ணிமா சொல்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.