பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக இரு வீடுகள் இரு நாமினேஷன் என்று புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் முதல் வாரத்தின் நாமினேஷன் டாஸ்க் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று சொல்லலாம்.
ரசிகர்களுக்கு பெரிதாக அறிமுகம் இல்லாத, ஜோவிகா விஜயகுமார், பாவா செல்லதுரை, யுகேந்திரன் வாசுதேவன், ரவீனா தஹா, ஐஷு, அனன்யா எஸ் ராவ் மற்றும் பிரதீப் ஆண்டனி ஆகிய ஏழு போட்டியாளர்கள் முதல் வாரத்தில் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக அனன்யா ராவ் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.
அனன்யா ராவ் எலிமினேஷன் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கியதற்காக 1 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பாதித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தமிழ் 7 இல் பங்கேற்பதற்காக அனன்யா ஒரு நாளைக்கு ரூ 12 ஆயிரம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் பிக் பாஸ் வீட்டில் 1 வாரம் தங்கியிருந்தபோது, பிக் பாஸுக்கான அவரது மொத்த சம்பளம் ரூ.84 ஆயிரம் தான் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியிலிருந்து பாவா செல்லதுரை வெளியேறியதாகக் கூறப்பட்டதால், விரைவில் ஒரு புதிய திருப்பம் அரங்கேற உள்ளது. இதுவரை பிக் பாஸ் தமிழ் 7 இல் பவாவின் பயணத்தின்படி, சக போட்டியாளர்களுடன் அவர் கடினமான நேரத்தை செலவழித்திருந்தார். அவரது வயது காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளராக ஆனார் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“