Tamil Biggboss 7 Promo : கை இருக்குல... அதால தேய்ங்க... ஸ்மால் பாஸ் வீட்டாரை வஞ்சிக்கும் கேப்டன் மாயா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Maaya Biggboss.

பிக்பாஸ் கேப்டன் மாயா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய ப்ரமோவில் இந்த வார கேப்டன் மாயா தனது ஆட்டத்தை ஸ்மால் பாஸ் வீட்டார்களுக்கு எதிராக தொடங்கியுள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந தேதி தொடங்கியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 3 வாரங்கள் முடிவில் அனன்யா ராவ்விஜய் வர்மா மற்றும் (தானாக வெளியேறிய) பவா செல்லதுறை ஆகியோர் வெளியேறியதை தொடர்ந்து 15 போட்டியயாளர்கள் உள்ளே இருந்தனர். 

தொடர்ந்து கடந்த வாரம் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியின் உள்ளே வந்தனர். அதே வாரம் யுகேந்திரன் மற்றும் விணுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டது. இதனிடையே 5-வது வார இறுதியான நேற்று முன்தினம்மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வந்த பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் அன்னபாரதி வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வார கேப்டனாக மாயா தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா காலையில் எழுந்தவுடன் டூத் ப்ரஷ் கொடுங்க என்று கேட்க, டீ போடுங்க என்று கேப்டன் மாயா சொல்லிவிடுகிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து டூத் ப்ரஷ்களையும் எழுத்து ஒளிய வைக்கிறார் மாயா. இந்த ரெண்டு வீட்டுக்கும் நீங்கள் தான் கேப்டன் என்று தினேஷ் சொல்ல, கை இருக்குல்ல, கைல பல் தேச்சிக்கோங்க என்று மாயா சொல்லி விடுகிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்டு அர்ச்சனா வெரி வெரி பயாஸ் கேப்டன்சி என்று சொல்ல, ஆமாங்க பயாஸ் கேப்டன்சி தான் என்று மாயா சொல்கிறார், மேலும் அந்த வீட்டுக்குள்ள போனவங்க எல்லாம் உள்ளே வாங்க என்று மாயா சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. பிரதீப்-க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது தொடர்பாக மாயா, பூர்ணிமா உள்ளிட்ட் சிலருக்கும், விசித்ரா, அர்ச்சனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மாயா தனது கேப்டன் பதவியை பயன்படுத்தி அவர்களை வச்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

biggboss Tamil Bigboss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: