அர்ச்சனாவுக்கு எதிராக தினேஷ்... விஷ்ணுவுக்கு ஷாக் கொடுத்த மாயா : பிக்பாஸ் எங்கே செல்கிறது?

தொடக்கத்தில் இருந்தே இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். ஆரம்பத்தில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த விசித்ரா, பூகம்பகம் டாஸ்க்கு பின் எதிராளியாக இருந்த மாயாவுடன் இணைந்துவிட்டார்.

தொடக்கத்தில் இருந்தே இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். ஆரம்பத்தில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த விசித்ரா, பூகம்பகம் டாஸ்க்கு பின் எதிராளியாக இருந்த மாயாவுடன் இணைந்துவிட்டார்.

author-image
WebDesk
New Update
Maaya Vishnu Archana

மாயா - அர்ச்சனா - விஷ்ணு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அர்ச்சனா திடீரென வெளியேற்றப்பட்டதும், விஷ்ணுவுக்கு மாயா முத்தம் கொடுத்ததும் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. தற்போதுவரை 60 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த 5 போட்டியாளர்களில் தற்போது 3 பேர் வெளியேற்றப்பட்டு அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகி இருவர் மட்டுமே பிக்பாஸ் வீ்ட்டில் இருந்து வருகின்றனர்.

தொடக்கத்தில் இருந்தே இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்து வந்தனர். ஆரம்பத்தில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த விசித்ரா, பூகம்பகம் டாஸ்க்கு பின் எதிராளியாக இருந்த மாயாவுடன் இணைந்துவிட்டார். அதன்பிறகு அர்ச்சனாவை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த தினேஷ் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் அர்ச்சனாவை வெளியேற்றியதால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் அர்ச்சனா நிக்சன் இடையே ஏற்பட்ட மோதலின்போதும், வார இறுதியில் கமல்ஹாசன் எபிசோட்டின் போதும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக இருந்த தினேஷ், நேற்று அர்ச்சனா தினேஷை நாமினேட் செய்தார். அதனைத் தொடர்ந்து டிக்கெட் டூ பினாலே டாஸ்க் முக்கியத்துவம் குறித்து அர்ச்சனாவுக்கு தெரியவில்லை என்று கூறி தினேஷ் அவரை வெளியேற்றினார். தினேஷின் இந்த செயல் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment
Advertisements

இது குறித்து விசித்ராவிடம் பேசிய அர்ச்சா எனது அண்ணனாக அவரை நினைத்திருந்தேன். ஆனால் அவர் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அர்ச்சனா கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க டிக்கெட் டூ பினாலே டாஸ்க் குறித்து எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது விஷ்ணு கீழே குனியா மாயா அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை எதிர்பார்க்காத விஷ்ணு, சிரிக்க அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.

கடந்த வாரம் மாயா பூர்ணிமாவுக்கு எதிரான தினேஷ் அணியுடன் விஷ்ணு பேசிக்கொண்டிருந்த நிலையில்,  இதனிடையே தற்போது மாயா விஷ்ணுவுக்கு முத்தம் கொடுத்திருப்பது பார்வையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: