வனிதா மகள் வீடியோ... ஷாக் கொடுத்த பிரதீப் : கண் கலங்கிய ஜோவிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள டாஸ்கில் ஹவுஸ்மெட்ஸ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து சக ஹவுஸ்மெட்ஸ் லைக் அல்லது டிஸ் லைக் கொடுக்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதீப் – ஜோவிகா இடையே கடுமையான விவாதம் நடந்ததை தொடர்ந்து தற்போது பிரதீப் சொன்னதை கேட்டு ஜோவிகா கண்கலங்கியுள்ள ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது வழக்கத்திற்கு மாறாக புதிய திருப்பத்துடன் அரங்கேறி வரும் இந்நிகழ்ச்சியில் நாள்தோறும் பல அதிரடியாக சம்பவங்கள் நடந்து வருகிறது. இரு போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக வாக்குவாதம் நடப்பதும், ஸ்மால் பாஸ் – பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களிடையே சண்டை நடப்பதும் என நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக ஸ்டார் டாஸ்க் என்ற புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மெட்ஸ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து சக ஹவுஸ்மெட்ஸ் லைக் அல்லது டிஸ் லைக் கொடுக்கலாம். இந்த நிகழ்ச்சியில் ஜோவிகாவின் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோவுக்கு லைக் கொடுத்துள்ள பிரதீப் ஆண்டனி அதன்பிறகு கூறிய வார்த்தைகளை கேட்டு ஜோவிகா கண்கலங்கியுள்ளார்.
இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோவில், டாஸ்க் லெட்டரை படிக்கும் ரவீனா, ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்கள் 2 பேரின் குடும்பத்தினர் அனுப்பியுள்ள வீடியோக்களை பார்த்து லைக் அல்லது டிஸ்லைக் செய்ய வேண்டும் என்று படிக்கிறார், இந்த டாஸ்கில் பங்கேற்று வெளியில் வரும் பிரதீப் ஆண்டனி, எனக்கு வனிதாவை ரொம்ப பிடிக்கும். நான் அவரை பார்ப்பதற்காக அங்கே போனேன். ஆனால் அங்கு திரையில் அவங்க தங்கச்சிதான் இருந்தாங்க சோ நான் உனக்கு லைக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டு கண்ணீர் விடும் ஜோவிகா யுகேந்திரனிடம் அழுதுகொண்டிருக்கிறார். அதன்பிறகு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் காதல் ஜோடி என்று பெயர் பெற்றுள்ள மணி – ரவீனா ஜோடியில், மணி குடும்பத்தினர் அனுப்பிய வீடியோவை பார்த்த ரவீனா உனக்கு டிஸ்லைக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு இது ஏன்னா, கேம்முக்கு ஸ்டேட்டர்ஜி தேவை என்று விளக்கமும் கொடுத்துவிட்டார். இதனால் அப்சட் ஆனா மணி ரவீனாவிடம் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது நீ உன் மனசாட்சி படி விளையாடவில்லை என்று சொல்ல, என் மனசாட்சிக்கு என்ன சொல்லுச்சோ அதுக்குதான் நான் ஆடினேன். நான் எதுவும் யோசிக்காமல் ஆடினேன் என்று ரவீனா சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“