பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெற்றிகரமாக 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் கடந்த வாரம் பெண் போட்டியாளர்களுக்கு அச்சுறுத்தல் என்று புகார் எழுந்ததால், பிரதீப் ஆண்டனி தனது தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு கூட கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியது மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அர்ச்சனா விசித்ரா ஆகியோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள குறைவான மதிப்பு உள்ள போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்க மாயாவிடம் கூறியதை தொடர்ந்து அவர், டாஸ்க்கில் ரவீனா, விசித்ரா, கூல் சுரேஷ், அர்ச்சனா, மணி, தினேஷ் ஆகியோரை மாயா தேர்வு செய்தார். இதையடுத்து, இந்த ஆறு போட்டியாளர்களும் ஒரு வாரத்திற்கு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.
ஸ்மால் பாஸ் பிரிவில் உள்ள போட்டியாளர்கள், மற்ற பிக் பாஸ் ஹவுஸ்மேட்களின் உதவியின்றி சமையல், சுத்தம் செய்தல் மற்றும் சலவை செய்தல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். இந்த வாரம் முழுவதும், ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு பணிகளிலும், சவால்களிலும் பங்கேற்று தங்களுக்கான புள்ளிகளைப் பெற பெற்றால் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்கு திரும்ப முடியும்.
அதே நேரத்தில், 6-வது நாமினேஷன் தொடங்கியுள்ளது. கண்ஷப்ஷன் அறையில் தொடங்கிய இந்த செயல்முறையில, அர்ச்சனா உள்ளிட்ட ஸ்மால் பாஸ் டீம் அக்ஷயா மற்றும் சரவணாவை நாமினேட் செய்தது, அவர்கள் தங்கள் பாதுகாப்பாக விளையாடுகிறார்கள் என்று குறிப்பிட்டனர். விசித்ரா மாயா மற்றும் அக்ஷயாவை நாமினேட் செய்தார். ஐஷு, பூர்ணிமா மற்றும் ஆர்ஜே பிராவோ ஆகியோரையும், கூல் சுரேஷ் மணியை நாமினேட் செய்தனர்.
பிக் பாஸ் குழுவிற்குள், மாயா அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோரையும், பூர்ணிமா அர்ச்சனா மற்றும் விசித்ராவையும் நாமினேட் செய்தனர். தொடர்ந்து, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மாயாவும் பூர்ணிமாவும் அர்ச்சனாவையும் விசித்ராவையும் கிண்டல் செய்ததால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அர்ச்சனாவுக்கும் மாயாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.