Advertisment

எனக்கு உன் மேல ஒரு ஃபீலிங்... உனக்கு இருக்கா? பிக்பாஸ் வீட்டில் அடுத்த காதல் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஒருபுறம் சர்ச்சைகள் வெடித்து வந்தாலும் மறுபுறம் லவ் ட்ராக்குகள் பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Poornima vishnu

பூர்ணிமா - விஷ்ணு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே மணி – ரவீனா, நிக்சன் – ஐஷூ ஆகியோரின் லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக பூர்ணிமா – விஷ்ணு ஜோடி உதயமாகியுள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. இந்த வீட்டில் தற்போது மாயா – விசித்ரா டீம்க்கு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மோதலின் உச்சக்கட்டமாக இருக்கிறது. குறிப்பாக பிரதீப் ரெட் கார்டு வாங்கிக்கொண்டு சென்றது குறித்த சர்ச்சைகள் இன்னும் பிக்பாஸ் வீட்டில் வெடித்துக்கொண்டிருக்கிறது.

ஒருபுறம் சர்ச்சைகள் வெடித்து வந்தாலும் மறுபுறம் லவ் ட்ராக்குகள் பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதலில் மணி – ரவீனா காதல் ஜோடிகளாக சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து நிக்சன் – ஐஷூ இணைந்தனர். அதன்பிறகு சரவண விக்ரம் பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது பூர்ணிமா விஷ்ணுவிடம் ப்ரபோஸ் செய்வது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது.

தற்போது வெளியகியுள்ள ப்ரமோவில், தினேஷ் பொறுக்கி என்று சொன்னது குறித்து பூர்ணிமாவிடம் விஷ்ணு பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது எங்கள் வீட்டில் நான் எந்த பொண்ணை காட்டினாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க, ஆனால் அவர் சொன்னாரே பொறுக்கி அது மாதிரி நான் சுற்றிக்கொண்டிருக்க மாட்டேன் என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா எதோ சொல்ல, விஷ்ணு நெஞ்சில் கைவைத்து எதோ சொல்கிறார்.

இதை கேட்ட பூர்ணிமா இப்போ ஒன்று பண்ணீங்கல்ல இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சரி நான் ஓப்பன சொல்லிடட்டுமா எனக்கு ஒரு ஃபீலிங் இருக்கு. எனக்கு என்ன தோனுதோ அதை சொல்கிறேன். நீ இல்லனா இல்லனு சொல்லிடு பிடிக்கலனா என்ட சொல்லிடுங்க என்று சொன்ன, நான் இப்போ ஒன்றுமே சொல்லயே என்று விஷ்ணு சொல்கிறார், அதன்பிறகு எனக்கு அப்படி ஒரு ஃபீலிங் இருக்கு அப்படி பண்றீங்களானு கேட்கிறேன் என்று பூர்ணிமா சொல்கிறார்.

அத்துடன் ப்ரமோ முடிவடையும் நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அடுத்த காதல் ஜோடி ரெடி என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment