பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது எழுந்துள்ள சாப்பாடு தொடர்பான பிரச்சனை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது பிக்பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளாகள் விளையாடி வருகின்றனர். முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் அன நிலையில், பவா செல்லதுரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான் சமைத்து கொடுக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் இன்றைய ப்ரமோவில் பிக்பாஸ் வீ்ட்டில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறனர்.
இதில் யுகேந்திரன், நாங்கள் சாப்பாடு கொடுத்தால் தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்று ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல, இதற்கு மாயா ஏன் காரணம் சொல்லுங்க என்று சொல்கிறார். இதை கேட்ட யுகேந்திரன் இவங்க எல்லாம் கணக்கு பண்ணிட்டு இருக்காங்களாம் அதனால் தரலையாம் அதனால் நானும் சரி ஓகே சொல்லிட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு மாயா அந்த வீட்டுக்காகத்தான் நீங்க விளையாடுறீங்க என்று கேட்கிறார்.
அதற்கு யுகேந்திரன் இங்க இவ்ளோ பேர் சாப்பாடு இல்லாம இருங்காங்களே என்று சொல்ல, நீங்க டாஸ்க்கு தோத்துட்டா நாங்களும் சாப்பிட கூடாது என்று சொல்றீங்களா என்று மாயா கேட்கிறார். அது ரூல்ஸ்பா அவ்வளவுதான் என்று யுகேந்திரன். இதற்கு ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கேப்டனுக்கு பவர் இருக்கு என்று சொல்லி யுகேந்திரன் முடித்துவிடுகிறார். அதை கேட்டு மாயா உங்க பர்ஸ்னாலிட்டி என்னனு எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு என்று சொல்கிறார்.
அதன்பிறகு நீங்க வேணுனே டாஸ்க்ல தோத்துட்டீங்க என்று சொல்லும் மாயா யுகேந்திரன் சாப்பாட்டுல கை வைச்சா எரிக் சூன் என்று மாயா எச்சரிக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“