பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் சரவண விக்ரம் – விஷ்ணு இடையே காரசாரமான விவாதம் நடக்கிறது.
Advertisment
விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே சண்டையும் சர்ச்கைளும் வெடிக்க தொடங்கியது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் வழக்கத்திற்கு மாறாக இந்த நிகழ்ச்சியில் 2 வீடுகள் உள்ளன. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே டாஸ்க் என்றும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமையல், க்ளீனிங் வொர்க் மட்டுமே பண்ண வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2 வீடுகள் 2 எலிமினேஷன்கள் என இந்த 7-வது சீசன் வித்தியாசமாக இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், முதல் வாரத்தில் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனிடையே தற்போது இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் சரவண விக்ரம் ஏய் என்று கூப்பிட, ஏய் ஏய்னா என்ன அர்த்தம் என் பேர் சொல்லி கூப்பிடு என்று விஷ்ணு சொல்கிறார். அதனைத் தொடர்ந்து விஷ்ணு சரவண விக்ரமிடம், நீங்க கேப்டனா அல்ல 11 பேருமே கேப்டனா என்று கேட்டுவிட்டு, அப்போ உங்கள்ட ஆளுமை இல்லை என்று சொல்கிறார்.
இதை கேட்ட பிரதீப் இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்ல, அப்படியெல்லம் இருக்க முடியாது என்று விஷ்னு சொல்கிறார். மேலும் இங்க டீம் தான் பேசனும் டீமாதான் பேசனும் என்று சொல்ல, நான் உன் டீமே இல்லையே என்று பிரதீப் சொல்கிறார். ஆனால் நான் டீம் மெட்டா சொல்லுவேன் என்று சொல்ல, அதை கேப்டன் சொல்லட்டும் என்று சொல்கிறார். இதற்கு விஷணு உங்களுக்கு கேமே ஆட தெரியல பெரிய இது மாதிரி பேசிட்டு என்று சொல்கிறார்.
இந்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் என்ன சச்சரவு நடக்க போகிறது என்பது குறித:து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“