பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த 5 பேரும் தற்போது ஸ்மால்பாஸ் வீட்டில் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் ஷோவுக்கு அவர்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.
தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 29-ந் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இதனிடையே இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிக்பாஸ் வீட்டுக்குள் பிபி டேலன்ட் ஷோ நடத்தப்படுகிறது. இந்த ஷோ குறித்து வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா, வைல்ட் கார்டு என்டரியாக வந்த 5 பேரையும் ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்புனீங்கல்ல இப்போ உங்க போட்டிக்கு நாங்கதான் ஜட்ஜ் என்று சொல்கிறார். இதை கேட்டு அன்னபாரதி, கானா பாலா கைத்தட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது தனித்திறமையை நிரூபிக்கும் வகையில் நடனமாடுகின்றனர். இந்த ஆட்டத்தை பார்த்து அனைவரும் கைதட்டி வரும் நிலையில், ஐஷூ கை தட்ட அதை கூல் சுரேஷ் தடுக்கிறார், அதன்பிறகு கூல் சுரேஷ் நடராஜர் போல் போஸ் கொடுக்கிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பிரதீப் தனி ஆளாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“