Advertisment

நான் ஏழையே இல்லடா... மீண்டும் முற்றிய ஜோவிகா - பிரதீப் மோதல் : பிக்பாஸ் ப்ரமோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வரும் நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Biggboss 7 Promo

பிக்பாஸ் ப்ரமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதீப்பின் வார்த்தைகளால் கண் கலங்கிய ஜோவிகா தற்போது அவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இரு வீடுகள், 2 நாமினேஷக்ள் என புது விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார்.

பவா செல்லதுரை வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 3-வது வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் வாரம் கேப்டனாக இருந்த விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரேங்கிங் டாஸ்க் என்ற பெயரில் புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. இதில் ஒன்று முதல் 15 வரையான போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ரேங்க் டைட்டில் வின்னராகவும், கடைசி ரேங்க் எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் ஓடி சென்று தங்களதுக்கு உரிதாக இடத்தில் நின்றுகொண்ட நிலையில், 15-வது ரேங்கில் விணுஷா தேவி நின்றுவிட்டார். காலியாக உள்ள முதல் இடத்தில் பிரதீப் ஆண்டனி நின்றுள்ளார். அடுத்து நிக்சன் இன்று எண்டர்டெயின்மெண்டா பெருசா நீங்க எதுவுமு பண்ணல என்று சொல்ல, நீ பாடியதை விட இந்த வீட்டில் நான் நிறைய பாடியிருக்கிறேன் என்று நம்புற என பிரதீப் சொல்கிறார்.

அடுத்து விஷ்ணு நீங்க பலர் மனதை புண்டுத்தியிருக்கீங்க என்று சொல்ல, நான் ப்ரமோகாக கேம் ஆட வரல என்று பிரதீப் சொல்கிறார். ஐஷூ சொன்ன நீங்களாம் ஏழைகள் என்றால் அப்போ நான் யாரு என்று எனக்கு புரியவில்லை. நான் என்ன பிச்சைக்காரனா? நான் ஒரு பெரிய ஆர்டிஸ்டா மாறி காட்றதுக்கு இந்த காஸ்ட் தேவை. இந்த இடத்தை நான் யாருக்காவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். என்னை அடித்து சாகடித்துவிட்டு வேன இந்த இடத்தை எடுத்தக்கொள்ளுங்கள் என்று பிரதீப் சொல்கிறார்.

தொடர்ந்து வெளியான மற்றொரு ப்ரமோவில், நான் ஒரு மிடில்க்ளாஸ் விதத்தில் வளர்ந்ததை தான் சொல்கிறேன் என்று ஜோவிகா சொல்கிறார். அதை கேட்டு பிரதீப் பப்ளிக்கை மேனப்ளேட் பண்ணாதீங்க. நான் மிடில்க்ளாஸ்ல இருந்து வந்தேனு சொல்லாத என்று சொல்ல, ஜோவினா நான் அங்கிருந்து தான் வந்தேன் என்று சொல்கிறார். நீ ஏழை என்றால் என பிரதீப் ஆரம்பிக்க, நான் ஏழையே இல்லடா என்று ஜோவிகா சத்தம்போடுகிறார்.

இந்த வீட்டை பொருத்தவரைக்கும் நீ அப்படித்தான் சொன்ன என்று ப்ரதீப் சொல்ல, இந்த வீட்டில் விளையாடுவதற்கும், நான் போடுற ஷூ பேண்ட்க்கும் என்ன சம்பந்தம் என்று ஜோவிகா கேட்க, அது என்கிட்ட இல்லை என்று பிரதீப் சொல்ல, அது என் தப்பு கிடையாது என்று ஜோவிகா சொல்கிறார். அது இந்த உலகத்தோட தப்பு என்று பிரதீப் சொல்கிறார். இதை கேட்டு ஜோவிகா, அதை உலகத்துக்கிட்ட போய் கேளு என்று சொல்கிறார்.

இதை கேட்ட பிரதீப் ஆண்டனி அதுக்குதான் நான் இங்க நின்னுட்டு இருக்கேன் என்று சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கியதில் இருந்தே பிரதீப் ஜோவிகா இடையே மோதல் அதிகமாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment