பிரதீப் – ஜோவிகா இடையே அடிக்கடை முட்டலும் மோதலுமாக இருந்து வரும் நிலையில், இந்த காம்போவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது மாயா பூர்ணிமா காம்போ சண்டையை கையில் எடுத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வைல்ட் கார்டு 5 போட்டியாளர்கள் உள்ளே வருவது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது பூர்ணிமா மாயா இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் இரண்டு நாமினேஷகள் என வித்தியாசமாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீசனில் பல இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் 3 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இதில் பிரதீப் – ஜோவிகா இடையே அடிக்கடை முட்டலும் மோதலுமாக இருந்து வரும் நிலையில், இந்த காம்போவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது மாயா பூர்ணிமா காம்போ சண்டையை கையில் எடுத்துள்ளது. இதில் தற்போது புதிதாக கொண்டுவரப்பட்ட ஷாப்பிங் ரீபேமண்ட் டாஸ்கில் பிக்பாஸ் வீடு தொற்றதால், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பாடு கிடையாது என்று பிக்பாஸ் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், சாப்பாடு தான் முக்கியம் என்று கூறி மாயா உள்ளிட்ட சிலர் பிக்பாஸ் வீட்டில் இருந்து விதியை மீறி ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இது குறித்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கேட்க, அங்கிருக்கும் நிக்சன் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட மாயாவும் கூல்’ சுரேஷூம் உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஸ்மால் பாஸ் வீட்டுக்கு வந்துவிட்டனர்.
Advertisment
Advertisement
இதனால் கோபமான கேப்டன் பூர்ணிமா, நீங்கள் விதியை மீறி அங்கே செல்கிறீர்கள் என்று சொல்ல, நான் என்னை பார்த்துக்கொள்ளத்தான் இங்கே வந்திருக்கிறேன் என்று மாயா சொல்கிறார். மேலும் அவர்கள் பணிஷ்மெண்டில் இருக்கிறார்கள் என்று பூர்ணிமா சொல்ல, கேப்டன் நீங்களே அவர்களை தடுக்காதபோது நான் ஏன் தடுக்க வேண்டும் என்று நிக்சன் சொல்கிறார்.
இதன் பிறகு பூர்ணிமா என் பேச்சை கேட்காமல் நீங்கள் அங்க போணீங்க என்று கேட்க, நீங்கள் ஏன் போக கூடாதுனு சொல்றீங்க என்று மாயா கேட்கிறார். நீங்கள் போனதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் பூர்ணிமா, நீங்கள் எப்படி சாப்பிடுறீங்கனு நான் பார்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“