அர்ச்சனாவை பொறுத்தவரை அவர் ஒரு தொட்டாசிணுங்கி என்று விஷ்ணு கூறியவும், எதோ சொல்லணும் அப்படிங்கிறதுக்காக இப்போவும் அழுமூஞ்சி என்று சொல்றீங்களா என்று அர்ச்சனா கேட்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Advertisment
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நாள் தோறும் பெரும் சண்டை வெடித்து வருகிறது. இதில் மாயா நிக்சன் பூர்ணிமா ஆகியோர் ஒரு கேங்காவும், விசித்ரா அர்ச்சனா ஆகியோர் மற்றொரு கேங்காவும் மோதிக்கொண்டுள்ளனர். இதில் அவ்வப்போது ஒருவர் குறித்து மற்றொருவர் புரளிபேசுவதும், ஆக்ரோஷமாகசண்டை போடுவதும் என் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்துள்ளனர்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் என்று அறிவித்த பிக்பாஸ் 3 டாஸ்க்கள் நடக்கும். இதில் பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ் வெற்றி பெற்றால் வீட்டில் இருக்கலாம் தோல்வியடைந்தால்அவர்கள் வெளியேற்றப்பட்டு ஏற்னவே வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி 3 டாஸ்க்களும் முடிந்து தற்போது போட்டியாளர்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டனர்.
இதனிடையே இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்னாவை தொட்டாசிணுங்கி என்று விஷ்ணு சொல்ல,இதை ஒரு பெரிய பிரச்சனை ஆக்குவதற்காக மட்டும் என்னை தொட்டாசிணுங்கினு சொல்றீங்க என்று அர்ச்சனா கேட்கிறார். அர்ச்சனா எப்படினு மக்களுக்கு தெரிந்தது என்றால் அது அந்த பேச்சு தான் என்று விஷ்ணு பதிலடி கொடுக்கிறார்.
இப்போவும் அந்த அழுகர விஷயத்தை வைத்து தான் சொல்றீங்க. அதையே குத்திக்கிட்டு இருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும், அவங்க பண்ற ஃபன்-க்கு நானும் சிரிக்கனும் அப்போ தான் அது ஃபன். அவர்கள் செய்வதை பார்த்து நான் ஹர்ட ஆகிறேன் என்றால் அதுக்கு பேரு ஃபன் இல்லை என்று அர்ச்சனா சொல்ல, உங்கள் கெரியரிலேயே ஹைலட் மூமெண்ட் என்றால் அது தான் என்று விஷ்ணு சொல்ல நீங்களும் பூர்ணிமாவும் பேசிட்டே இருக்கீங்க நீங்க லவ்வர்ஸ்னு பாக்குறவங்களுக்கு தெரியும் என்று அர்ச்சனா சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“