நீ யாரா வேணா இரு... அவ்ளோதான் : விசித்ராவை எச்சரித்த நிக்சன்
பிக்பாஸ் வீட்டில் 2-வது ஜோடியாக நிக்சன் – ஐஷூ உருவானார்கள். இருவரும் கண்ணாடி பக்கத்தில் நின்றுகொண்டு முத்தம் கொடுப்பது போல் செய்த பாவனைகள் அனைத்தும் இணையத்தில் வீடியோவாக வெளியாகியது.
ஐஷூ வெளியேறியது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீ யாரா வேண இருக்கலாம் மரியாதை கொடுக்க முடியாது என்று நிக்சன் விசித்ராவிடம் பேசிய ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் காதல் கதைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. முதலில் மணி – ரவீனா இடையே காதல் ஏற்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர்.
இடையில் மணி வீட்டில் இருந்து வந்த வீடியோவை பார்த்து ரவீனா டிஸ்லைக் கொடுத்திருந்தாலும் அவருகளுக்கு இடையிலான நெருக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் 2-வது ஜோடியாக நிக்சன் – ஐஷூ உருவானார்கள். இருவரும் கண்ணாடி பக்கத்தில் நின்றுகொண்டு முத்தம் கொடுப்பது போல் செய்த பாவனைகள் அனைத்தும் இணையத்தில் வீடியோவாக வெளியாகியது.
இதனிடையே கடந்த வாரம் ஐஷூ எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் கடுப்பான நிக்சன் விசித்ராவிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், நானும் ஐஷூவும் பேசியது தப்புனான மணியும் ரவீனாவும் பேசியது தப்புதான். இதற்கு விசித்ரா மரியாதையா பேசு என்று சொல்ல, நீங்க மரியாதை கொடுங்க அதன்பிறகு நான் மரியாதை கொடுக்கிறேன் என்று நிக்சன் சொல்கிறார்.
நீ யாராவேணா இருந்துட்டு போ... அர்ச்சனா கெட்டுப் போறதுக்கு காரணமே நீங்கதா. இதை கேட்ட அர்ச்சனா நான் என்ன கெட்டுப்போன நீங்க பார்த்தீங்க என்று கேட்க, நான் உங்களிடம் பேசவில்லை என்று நிக்சன் சொல்கிறார். அதற்கு அர்ச்சனா என் பேர யூஸ் பண்ணீங்களே என்று சொல்ல, ஐஷூ வெளியே போனது பற்றி பேசியதால் தான் நான் சொன்னேன் என்று சொல்கிறார்.
இதை கேட்ட அர்ச்சனா 40 நாளா ஐஷூ எதுவுமே பண்ணாம இருந்ததற்கு காரணம் ஃபுல்லா நிக்சனோட இருந்தது தானே என்று சொல்லி, எல்லாருமே ஒருநாள் எலிமினேட் ஆகி வெளியில போவாங்கல்ல என்று கேட்க, கண்டிப்பா போவாங்க என்று நிக்சன் சொல்கிறார். இதை கேட்ட அர்ச்சனா, அப்படி வெளியில் போற அன்னிக்கு நீ போய் ஐஷூவை பார்த்துக்கோ என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“