பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அசைந்தால் போச்சு என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.
தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 29-ந் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் அசைஞ்சா போச்சு என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் மணி கட்டிய ஹெட் கேர் தலையில் அணிவிக்கப்படுகிறது. இதில் உள்ள மணி சத்தம் கேட்காமல் ஃபரீஸ் ஆகவேண்டும் என்பது தான் டாஸ்க். அனைவருக்கும் இந்த மணி பொருத்தப்பட்டவுடன், ப்ரதீப் ஒருவரிடம் நேர்மையா ஆடிகிட்டு இருக்கேன் அமைதியா போய்டு என்று கூல் சுரேஷிடம் கூறுகிறார்.
இதில் கடைசியாக யார் யார் அவுட் என்று சொல்லுங்கள் என்று பிக்பாஸ் கேட்க, ரவீனா பிரதீப் என்று சொல்கிறார்கள். இதை கேட்டு பிரதீப் எதோ சொல்ல, என்னடா என்று கேட்கும் கூல் சுரேஷ் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள 2-வது ப்ரமோவில், பிரதீப் ஏதோ சொல்ல, உனக்கு என்னடா என்று விஷ்னு கேட்கிறார். இதை கேட்ட பிரதீப் மரியாதை இல்லை என்று சொல்கிறார். உடனே விஷ்ணு கூல் சுரேஷ் இருவரும் என்ன மரியாதை இல்லை என்று ஆவேசமாக கேட்க, போடா சில்ற பையா என்று என்று பிரதீப் கூல் சுரேஷை மரியாதை இல்லாமல் பேசிவிடுகிறார். இதை கேட்ட விஷ்ணு யாரு இவர் சில்ற பையனா, என்று கேட்கிறார்.
அதை கேட்டு பிரதீப் சில்ற பையன் தான் அவன் என்று சொல்ல, வாடா போடானு பேசாத என்று கூல் சுரேஷ் கொந்தளிக்கிறார். நான் அப்படித்தான் பேசுவேன் என்று பிரதீப் சொல்ல, செருப்பால் அடிப்பேன்டா என்று சொல்ல, அடிடா அடி என்று கூல் சுரேஷ் பிரதீப்பிடம் சொல்கிறார். மற்ற அனைவரும் பிரதீப் நீ பண்றது ரொம்ப தப்பு என்று சொல்ல அவர் பரவாயில்லை என்று சொல்கிறார். அதன்பிறகு பிரதிப்பிடம் சாரி சொல்லுங்க என்று சொல்ல உன் வேலையை பார்த்துகிட்டு போறியா என்று கேட்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“