சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த வரவேற்பை அதிகப்படுத்தும் வகையில் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கு 4 முக்கிய நாயகிகள் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார்.
இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிமிழில் தொடங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ இணையத்தில் வைரலாக பரவியது.
அதே போல் நிகழ்ச்சியின் புதிய லோகோவும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வரும் பிக்பாஸ் அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,6-வது சீசனை விட 7-வது சீசன் பெரும் விறுவிறுப்பை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக இந்தமுறை 2 பிக்பாஸ் வீடு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் முக்கிய போட்டியாளர்கள் குறித்தும் தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி,பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், கோவை முதல் பெண் பஸ் ஓட்டுனரான ஷர்மிளா, நடிகர் பப்லு பிரித்விராஜ், சர்ச்சைநாயகி ரேகா நாயர், ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் சின்னத்திரையின், பிரபல தொகுப்பாளியும், சீரியல் நடிகையுமான ஜாக்குலின், பாரதி கண்ணம்மா ஃபரினா, ராஜா ராணி சீரியல் நடிகை விஜே அர்ச்சனா, மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நட்சத்திரா என விஜய் டிவி பிரபலங்கள் பெயரும் அடிப்பட்டு வருகிறது. இப்படி வெளியாகி வரும் பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தாலும் இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“