பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் தனது கல்வி குறித்து உருக்கமாக பேசியது சக போட்டியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இளம் வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளவர் ஜோவிகா விஜயகுமார். பிரபல நடிகை வனிதா விஜயகுமார், திரைத்துறையில் சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
வனிதா விஜயகுமார் இருந்தால் அந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லும் அளவுக்கு வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், முதல் நாளில் ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை என்று சொல்ல அதற்கு நடிகை விசித்ரா எது எப்படி இருந்தாலும் +2 வரை படித்துவிடுங்கள் என்று கூறியிருந்தார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதை கண்டுகொள்ளாத ஜோவிகா அதை விட்டுவிட்டு வேறு எதையோ பற்றி பேச தொடங்கி விசித்ராவுக்கு நோஸ்கட் கொடுத்தார். இதனிடையே நேற்றைய டாஸ்கில் வெற்றி பெற்ற ஜோவிகா விஜயகுமார், கண்கலங்கியபடி பேசி பலரின் கண்களில் கண்ணீரையும் வரவழைத்தார். நேற்றைய நாளில் ப்ளாக்டு அன்ட் வெரிஃபைடு என்ற ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. இதில் சரவண விக்ரம் மற்றும் ஜோவிகா பங்கேற்கின்றனர்.
இருவரும் தங்களது பின்னணி குறித்து சொல்ல வேண்டும். இதில் யாருடையது சுவாரஸ்யமாக இருக்கிறதோ அவர்களே வின்னர் என்று சொல்லப்பட்ட நிலையில், முதல் செக்மெண்டில் இருவருமே சமமாக இருந்தால் அடுத்து செக்மெண்ட நடத்தப்பட்டது. அதிலும் இருவரும் ஒன்றாக சமமான பாயிண்ட்கள் பெற்றதால், 3-வது நடத்தப்பட்ட செக்மெண்டில் ஜோவிகா விஜயகுமார் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற ஜோவிகா பேசும்போது, நான் ஒன்று மட்டுமே சொல்ல ஆசைப்படுகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தததில் இருந்து 2 நாட்களாக என்னை பற்றியும் என் பள்ளி படிப்பை பற்றியும் பேசி வருகிறார்கள். ஏன் 9-ம் வகுப்பியில் நின்னுட்ட இன்னும் படித்திருக்கலாமே என்று நிறைய அட்வைஸ் பண்ணீங்க. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். படிக்கவும் எனக்கு ஆசை இருந்தது. ஆனால் எனக்கு படிப்பு வரலில்லை.
அதனால் எனக்கு ஆர்வம் படிப்பில் இல்லை. எனது ஆர்வம் வேறு எதிலோ இருக்கிறது அதை நான் தேடி கண்டுபிடிக்க முயற்சித்தேன். அதற்கு என் அம்மாவும் எனக்கு சப்போர்ட் பண்ணி 9-ம் வகுப்போடு நிறுத்திட்டாங்க. படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு உள்ளிட்ட எதிலுமே நான் பங்கேற்றதில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக கிடைத்த பெரிய வாய்ப்பு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இதில் ஃபர்ஸ்ட் டைம் நான் ஜெயிச்சிருக்கேன்.
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ எனக்கு தெரியுது எனக்குள்கும் சில திறமைகள் இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன் என்று பேசியிருந்தார். ஜோவிகாவின் பேச்சை கேட்டு சரவண விக்ரம், நான் தொற்றது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் ஜோவிகாவின் பேச்சை கேட்டு நான் தொற்றதால் சந்தோஷப்படுகிறேன். ஜோவிகா ஜெயிச்சது எனக்கு சந்தோஷம் தான் என்று கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“