பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வனிதாவின் மகள் ஜோவிகா ஆபத்தான ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று நடிகை விசித்ரா கூறியுள்ள ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது பரபரப்பான திருப்பங்கள் சண்டை சச்ரவுகளுடன் அரங்கேறி வரும் நிலையில், தொடக்கத்திலேயே வெடித்த ஜோவிகா – விசித்ரா மோதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. யாராக இருந்தாலும் அடிப்படை 12-ம் வகுப்பு வரை படித்துவிட வேண்டும் என்று விசித்ரா சொல்ல, அதற்கு ஜோவிகா எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையாக வெடித்தது.
இந்த சண்டையில் கல்வி தேவையில்லாதது என்று ஒரு பிரிவினர் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும், கல்வி அனைவருக்கும் முக்கியமானவது என்று கூறி ஒரு பிரிவினர் விசித்ராவுக்கும் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் கமல்ஹாசன் பேச்சுக்கு பின் தீர்ந்து இருவரும் மீண்டும் இணைந்த நிலையில், கடந்த வாரம் கேப்டனாக மாயாவுடன் சேர்ந்த ஜோவிகா விசித்ராவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார்.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் விசித்ரா தினேஷிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்ம கேமுனு நெனச்சி ஆடல இவங்களே வலையில வந்து விழுந்துட்டாங்க. ஜோவிகாட்ட நான் எதார்த்தமா தான் படிப்பு பத்தி பேசினேன். அ பெரிய பிரச்சனையா ஆக்குனது அவதான் என்று சொல்ல, அதற்கு தினேஷ், அவங்க கேம் ஆடிட்டு நான் விளையாட கூடாதுனு நினைக்கிறராங்கல்ல ஒருவேளை அது அவங்களோட கேமா கூட இருக்கலாம் என்று சொல்கிறார்.
இதை கேட்ட விசித்ரா, ஜோவிகா இப்போ பாயிசன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாள். அவ கூட இருக்கிற எல்லாருமே விஷங்க. அதனால அவளும் அந்த மாதிரி தான் யோசிப்பா என்று சொல்கிறார். இதை கேட்டு ஜோவிகா சிரிக்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“