பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வரும் நிலையில், உணர்ச்சிகரமான சந்திப்புகள் மற்றும் எதிர்பாராத ஆச்சரியங்கள் நிறைந்த இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்ப சிறப்பு வாரமாக இருந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு இதயப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனின் தொடக்கத்தில் இருந்தே இளம் போட்டியாளர்களுக்கு நிகராக டாஸ்க் மற்றும் பல நிகழ்வுகளில் போட்டி போட்டு வரும் நடிகை விசித்ரா, ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது நிகழ்ந்து வரும் குடும்ப சிறப்பு பகுதியில், விசித்ராவுக்கு பெரும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று வரும் நிலையில். இந்த வாரம் விசித்ராவின் அவரது கணவர் மற்றும் மூன்று மகன்கள் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட விசித்ரா ஆனந்த கண்ணீருடன் வரவேற்பு அளித்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களும் இந்த அன்பான வரவேற்பில் கலந்து கொண்டனர்.
மேலும் விசித்ராவின் விளையாட்டில் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், அவரது மகன் அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசியிருந்தார். இதில் இந்த நிகழ்ச்சியை வெறும் விளையாட்டாக கருதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உணர்ச்சி மிகுந்த இந்த தருணத்தில், நிக்சனின் சகோதரரும் வீட்டிற்குள் நுழைந்தார், அவரது அவரும் நிக்சனுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார்.
நிக்சனை மிகவும் கவலை இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமாறு கூறிய அவரது சகோதரரின் பிக்பாஸ் வருகை, தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் ஒரு குடும்ப ஆடம்பர பட்ஜெட் பணியை அறிமுகப்படுத்தினார், போட்டியாளர்களை பார்க்க வந்த குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களாக மாறி, இந்த சவாலை எதிர்கொண்டனர்.
இதில் ஒவ்வொருவரும் 50 புள்ளிகளைக் கொண்ட மூன்று கேள்விகளை பிக்பாஸ் முன்வைத்தார். இதில் பதில்கள் சரியாக இருக்கும்போது மட்டுமே புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனிடையே 8-வது போட்டியாளராக விஜயின், சகோதரரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். குடும்ப சொகுசு பட்ஜெட் டாஸ்க்கில் பங்கேற்ற விஜய்யின் சகோதரர் நான்கு கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, ஹவுஸ்மேட்களுக்கு கணிசமான 200 புள்ளிகளைப் பெற்றார்.
இந்த எபிசோட்டில் நாமினேஷனின் போது பதற்றம் அதிகரித்தது, சரவணன், அர்ச்சனா மற்றும் ரவீனா வெளியேற்றப்படுவதற்கான நாமினேஷன் பெற்ற நிலையில், நிகழ்ச்சியின் 12-வது வாரத்தில் வெளியேறப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பிக் குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிகரமான சந்திப்புகள் மற்றும் எதிர்பாராத ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு வாரத்தில், போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இதயப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களையும் கொடுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“