பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சரவண விக்ரம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டில் குறிப்பிடும்பாடியாக எதுவும் செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வரும் அவரை விஜய் டிவியெ கலாய்த்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் தங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதையே மறந்து, பிக்பாஸ் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர் என்ற விமர்சனம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக, வினுஷா தேவி, அக்ஷையா, பிராவோ ஆகியோர் குறித்து மீம்ஸ்கள் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த பட்டியலில் புதிதாக இணைந்தவர் சரவண விக்ரம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயில் மூலம் புகழ்பெற்ற இவர், நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து பெரிதாக எதுவும் செய்யாத நிலையில,, தான் கேப்டனாக இருந்தபோது கூட தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது. அதே சமயம் கடந்த வாரம் சரவண விக்ரம் பூர்ணிமாவிடம் பேசிய வீடியோ பதிவு ஒன்றில், தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்றும், கட்டிப்பிடிப்பது குறித்தும் பேசியிருந்தார்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நெட்டிசன்கள் தான் ட்ரோல் செய்வார்கள். ஆனால் தற்போது சரவண விக்ரமை விஜய் டிவியே ட்ரோல் செய்யும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் அவ்வப்போது அவர் பேச்சு மற்றும் செயல்களை பிக்பாஸ் பெரிதுபடுத்தி காட்டிய நிலையில், தற்போது அவர் மிக்சர் சாப்பிடும் காட்சி வரும்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்றால் வாக்களியுங்கள் என்று டிஸ்ப்ளேவில் வருகிறது.
இந்த காட்சிகள் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் டிவிக்கு குறும்பு அதிகம். சரவண விக்ரமை கலாய்ப்பதே வேலையாக வைத்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே மாயா சரவண விக்ரமை சிறந்த போட்டியாளர் என்று கூறியது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் மற்றும் விஜய் டிவி இருவரும் இணைந்து ட்ரோல் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“