பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியான இன்று தொகுப்பாளர் கமல்ஹாசன் என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், போட்டியாளர் ஒருவரால் தான் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று பெண் போட்டியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் புகார் தெரிவித்துள்ளார்.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.
தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 29-ந் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, கானாபாலா, அன்னபாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஸ்மால்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தொகுப்பாளர் கமல்ஹாசன் என்டரி கொடுத்துள்ளார். இது குறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் முதலில் பேசும் ஜோவிகா, கெட்ட வார்த்தை தவறான நோக்கத்தில் யூஸ் பண்றார் என்று சொல்கிறார். அதன்பிறகு பூர்ணிமா சிலபேருக்காக நைட் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்று சொல்கிறார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு நிக்சன் நான் பேசியது தப்பு கிடையாது நான் இப்படிதான் பேசுவேன் என்று சொல்கிறார் என சொல்ல, அடுத்து ரவீனா என்னோட அர்ணா கயிறு குறித்து கமெண்ஸ் சொல்லியிருக்காருஎன்று சொல்கிறார். அதன்பிறகு விஷ்ணு என்னிடம் பேசினால் உன்னை அசிங்க அசிங்கமாக கேட்பேன் என்று சொல்வதாக கூறுகிறார். அதன்பிறகு மணி இப்போது நான் பார்த்தேன் சார் டோர் மூடாம டாய்லெட் யூஸ் பண்றார் என்று சொல்கிறார்.
இவர்கள் அனைவருமே பிரதீப் ஆண்டனி பற்றி தான் சொல்கிறார்கள். கடைசியான மணி சொன்ன டோர் மூடாம டாய்லெட் யூஸ் பண்றார் என்று சொன்னதற்கு நான் வேண்டுமென்றே தான் அப்படி செய்தேன் என்று பிரதீப் சொல்ல இதற்கு என்ன தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று சொல்கிறார் கமல்ஹாசன். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“