Advertisment

Biggboss 7 Tamil : தினேஷ், அர்ச்சனா, பாலா... 5 வைல்டு கார்டு என்ட்ரியில் கேம் சேஞ்சர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Biggboss Wildcard

தினேஷ் - அண்ணா பாரதி - அர்ச்சனா - கானா பாலா - பிராவோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்டோபர் 29 (நேற்று) புதியதாக 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.

தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார் என்ட்ரியாக உள்ளே வருவார்கள் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் கடந்த அக்டோபர் 23-ந் தேதி அறிவித்திருந்தார். மேலும் அக்டோபர் 29-ந் தேதி (நேற்று)  அவர்கள் 5 பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்டரி ஆவார்கள் என்று அறிவித்திருந்தார்,

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு நுழைவு எப்போதுமே பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும். அந்த எதிர்பார்ப்புக்கு இந்த சீசனும் விதிவிலக்கல்ல. இந்த 5 வைல்ட் கார்டு என்ட்ரியில் ஏற்கனவே விஜே அர்ச்சனா மற்றும் கானா பாலா ஆகியோர் உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற மூன்று போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவர்கள் பிக்பாஸ் வீட்டில் என்டரி ஆகியுள்ளனர்.

வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த போட்டியாளர்கள்

தினேஷ் கோபால்சாமி

தினேஷ் கோபால்சாமி தமிழில் சீரியல் நடிகர். கடந்த 2010 ஆம் ஆண்டு மஹான் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகராக அறிமுகமானார். பின்னர் அவர் பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் மற்றும் மிஸ்டர் & மிசஸ் கிலாடிஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 2014 இல் திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அன்னா பாரதி

அன்னா பாரதி பெர்ச்மன்ஸ் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகை மற்றும் சமூகவலைதளங்களில் முக்கிய பிரபலமாக உள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோயர்களை வைத்துள்ளார். ஸ்டார் விஜய் மற்றும் சன் டிவி நெட்வொர்க்குகள் இரண்டிலும் ஒளிபரப்பாகும் "பட்டிமன்றம்" என்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக அவர் கணிசமான பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

விஜே அர்ச்சனா

விஜே அர்ச்சனா, வீடியோ ஜாக்கி, நடிகை மற்றும் தொகுப்பாளினி, என பன்முறை திறமை கொண்டவர். சன் டிவியில் விஜேவாக தனது பயணத்தைத் தொடங்கிய அவர் தனது திறமை மற்றும் ஆளுமைக்காக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு ராஜா ராணி 2 என்ற சீரியலில் அர்ச்சனாவாக நடித்ததன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து விலகிய அவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கானா பாலா

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகரான கானா பாலா அட்டகத்தி படத்தில்' ஆடி போன ஆவணி' மற்றும் 'நடுகடலுல கப்பலா' பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆர்,ஜே பிராவோ

பிரபலமான தமிழ் ரேடியோ ஜாக்கியான ஆர்,ஜே பிராவோ தற்போது 89.4 FM துபாயில் பணிபுரிகிறார். தனது நகைச்சுவையான மற்றும் ஹோஸ்டிங் பாணியில் அறியப்படும் இவர், சமூக ஊடகங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவரது வீடியோக்கள் பரவலாக பகிரப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment