Biggboss 7 Promo : தினேஷ் vs பூர்ணிமா... முதல் நாளே முற்றிய மோதல் : ஆட்டத்தை மாற்றுவாரா?

15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார் என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.

15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார் என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Biggbos Dinesh

பிக்பாஸ் சீசன் 7 : தினேஷ் vs பூர்ணிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த நடிகர் தினேஷ் முதல் நானே பூர்ணிமாவுடன் பெரிய மோதலை ஏற்படுத்தியுள்ள ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக 2 வீடுகள் 2 நாமினேஷன்கள் என புதிய விதிகளுடன் தொடங்கப்பட்ட இந்நிக்ழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில்அடுத்த இரு தினங்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறியதால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை.

தொடர்ந்து கடந்த வாரம் முதல் வாரத்தின் கேப்டன் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் 15 போட்டியாளர்கள் பங்கேற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார் என்ட்ரியாக உள்ளே வருவார்கள் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் கடந்த அக்டோபர் 23-ந் தேதி அறிவித்திருந்தார். மேலும் அக்டோபர் 29-ந் தேதி (நேற்று)  அவர்கள் 5 பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்டரி ஆவார்கள் என்று அறிவித்திருந்தார்,

அதன்படி நிகழ்ச்சியின் 4-வது வாரமான நேற்று நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதில் இன்று கேப்டன் பூர்ணிமா இவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களை ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதனால் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர்களை கார்னர் செய்வதாக வி.ஜே.ஆர்ச்சனா தெரிவித்திருந்தார்.

Advertisment
Advertisements

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பூர்ணிமா ஸ்மால்பாஸ் வீட்டின் முன் துணிகளை காயவைத்துள்ளார். இதை பார்த்த தினேஷ் உங்கள் வீட்டு முன்பு காயபோட வேண்டியதானே இங்கு எதற்காக காய போட்ருக்கீங்க என்று கேட்கிறார். இதற்கு மண்டையில் எதாவது இருந்தா இப்படி பேச மாட்டாங்க என்று சொல்லும் பூர்ணிமா, அந்த இடத்தில் துணி காய போட கூடாது என்று நீங்கள் சொல்ல கூடாது என்று சொல்கிறார்.

என் வீட்டுக்குள் நீங்கள் போட கூடாது என்ற ஆட்டியூட் இருக்க கூடாது. நியாயமாதான் பேசனும் நீங்க. இவர் பிரச்சனை பண்ணணும்னு பண்றாரு. நீங்கள் பிரச்சனை பண்ணணும்னு யோசித்து பண்ணீங்கனா நானும் பிரச்னை பண்ணுவேன் என்று பூர்ணிமா சொல்கிறார். இத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. தினேஷ் நேற்றுதான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். முதல் நாளே கேப்டன் பூர்ணிமாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சி குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: