ப்ரமோ பொறுக்கி... அதே உதை தான் உனக்கும் : பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு - தினேஷ் மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த நடிகர் தினேஷ், நடிகர் விஷ்ணுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த நடிகர் தினேஷ், நடிகர் விஷ்ணுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Biggboss 7 Dinesh

பிக்பாஸ் 7 ப்ரமோ

வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த திணேஷ் - விஷ்ணுவுடன் மோதும் ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது பரபரப்பான திருப்பங்கள் சண்டை சச்ரவுகளுடன் அரங்கேறி வரும் நிலையில்தொடக்கத்திலேயே வெடித்த ஜோவிகா விசித்ரா மோதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. யாராக இருந்தாலும் அடிப்படை 12-ம் வகுப்பு வரை படித்துவிட வேண்டும் என்று விசித்ரா சொல்லஅதற்கு ஜோவிகா எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையாக வெடித்தது.

இந்த சண்டையில் கல்வி தேவையில்லாதது என்று ஒரு பிரிவினர் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும்கல்வி அனைவருக்கும் முக்கியமானவது என்று கூறி ஒரு பிரிவினர் விசித்ராவுக்கும் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் கமல்ஹாசன் பேச்சுக்கு பின் தீர்ந்து இருவரும் மீண்டும் இணைந்த நிலையில்கடந்த வாரம் கேப்டனாக மாயாவுடன் சேர்ந்த ஜோவிகா விசித்ராவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார்.

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த நடிகர் தினேஷ், நடிகர் விஷ்ணுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் வா வா ப்ரமோ பொறுக்கி உட்காரு என்று திணேஷ் சொல்ல, பொறுக்கி கிறுக்கினு சொன்ன வேற மாதிரி ஆகிடுவ நீ என்று விஷ்ணு சொல்கிறார். எதுக்கு பொறுக்கினு சொன்ன என்று விஷ்ணு ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எட்டி உதைக்க, தினேஷ் மீண்டும் ப்ரமோ பொறுக்கி என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்ட விஷ்ணு ப்ளாஸ்டிக்கை உதைத்தது போல் அதே மிதி தான் உனக்கும் என்று சொல்கிறார். ப்ரமோவில் கண்டன்ட் வரதுக்காகவே அங்கபோய் காதுல பொறுக்குறது, இந்த காதுல பொறுக்குறது என்றுளு திணேஷ் சொல்ல, விஷ்ணு போயா உன்னை பற்றி எல்லாம் தெரியும் போய் உட்காருயா என்று சொல்ல, என்ன தெரியும் உனக்கு என்று தினேஷ் கேட்க, சிரிச்சீனா அவ்வளவு தான் என்று விஷ்ணு சொல்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: