Advertisment

Biggboss Tamil 8: காத்திருக்கும் பிரபலங்கள்; டைட்டில் வின்னர் சிபாரிசில் வரும் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகிழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Biggboss 8

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில், தொடங்க உள்ள நிலையில், முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னரின் சிபாரிசில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் இந்நிகழ்ச்சியில் என்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

Advertisment

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 8-வது சீசன் தொடங்க உள்ளது.

பொதுவாக சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்கள், சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் ஆகியோர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம், இதுவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் கடந்த சீசனில் வாய்ப்பு கிடைக்காத விஜய் டிவி நட்சத்திரங்கள், நடிகர் அஸ்வின், ஜாக்குலின் உள்ளிட்ட சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோல், இந்த சீசனில், நடிகர் அருண் பிரசாத் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரத்னகுமார் இயக்கததில் வெளியான மேயாத மான் படத்தில ஹீரோவின் நண்பராக அறிமுகமான அருண் பிரசாத், சின்னத்திரையின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியல் அவருக்கு பெரிய உச்சத்தை கொடுத்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை அர்ச்சனா தான் அருண் பிரசாத்திற்கு சிபாரித்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி சீரியலில் நடித்த அர்ச்சனா, அருண் பிரசாத் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து இருவருமே எந்த தகவலும் கூறாத நிலையில், தற்போது அர்ச்சனா அருண் பிரசாத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment