/indian-express-tamil/media/media_files/ibjv0FJGuYPuxY1F3vAa.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கிய முதல் நாளே பரபரபப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தரன், உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனை அனுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், முதல் நாள் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்தவுடனே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கிவிட்டதால், முதல் நாளிளேயே யாரும் எதிர்பார்க்காத வகையில், எலிமினேஷன் நடந்துள்ளது. இதில் சாச்சனா நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முதல் வாரத்தில் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக்பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாமினேஷனில், சௌந்தர்யா. அருண் பிரசாத், முத்துகுமார், ரஞ்சித், ரவீந்திரன், ஜாக்குலின் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களின் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை கேப்டன் யார் என்ற தேர்வு நடைபெற்ற நிலையில், பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடத்தப்பட்ட டாஸ்க்கில், ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், ரவீந்திரன் சந்திரசேகரும் காயமடைந்தார். அவருக்கு உடநல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் அவரை கவனித்து வருகின்றனர்.
Fatman Health Issue…
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 8, 2024
Viraivil apo next Eviction Irukalam.#BiggBossTamil
pic.twitter.com/xd0vVUAkZN
நாமினேஷன் பட்டியலில் இருக்கும் ரவீந்திரன் உடல்நல் பாதிப்பு காரணம் காட்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.