பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில், முதல் நாளில் இருந்தே பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கானா பாடகராக உள்ளே வந்துள்ள ஜெஃப்ரி பேசும் விதம் நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது.
வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் நாளில் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது பலரையும் கவர்ந்த நிலையில், கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்துவிட்டார் என்றும் கூறி வந்தனர்.
முதல்நாள் போட்டியாளர்கள் அறிமுகம் முடிந்த நிலையில், ரவீந்திரன் சந்திரசேர், ரஞ்சித், வி.ஜே.விஷால், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், அருண் பிரசாத் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், சாச்சனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது தொடர்பான ப்ரமோ வெளியான நிலையில், டி.ஆர்.பிக்காக முதல் நாளில் எதாவது வித்தியாசம் நடக்கும் என்று பலரும் கூறியிருந்தனர். அவர் வெளியேறினாலும், மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வருவார் என்று கூறி வந்தனர்.
இதனிடையே, கானா பாடகராக உள்ளே வந்த ஜெஃப்ரி, பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், சக போட்டியாளர்களிடம் நன்றாக பழகி வருகிறார். இதில் நேற்று அவர், தனது 12 வயதில் இருந்து 6 வருடங்களாக ஒரு கேரளா பெணணை காதலித்து வந்ததாகவும், தன்னிடம் போன் இல்லை என்பதால் அந்த பெண் தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். அதேபோல் நேற்று ஆண்களா பெண்களா என்பது தொடர்பான விவாதத்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சிங்கிள் பேரண்டாக இருக்கும் பெண்களிடம், அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார்கள் என்று பெண்கள் அணியினர் சொல்ல, உடனே ஜெஃப்ரி நீங்க எதுக்கு அட்வான்டேஜ் எடுக்க விடுறீங்க என்று கேட்டுள்ளார். இதை கேட்டு சுனிதா ஜாக்குலின் உள்ளிட்டோர் கோபமான நிலையில், ஜெ.ப்ரியை தனியாக அழைத்து, நீ இப்படி பேசுவது தவறு என்று புத்திமதி கூறினர். முத்துகுமார், ரவீந்திர் ஆகிய இருவரும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அதன்பிறகு கண்ணாமூச்சி டாஸ்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கண்ணாமூச்சி விளையாட்டின்போது, சௌந்தர்யா விழுந்துவிட்ட நிலையில், உடனே ஜெஃப்ரி அமுக்கட்டா என்று பேசிக்கொண்டே அவரின் அருகில் சென்றுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். கடந்த சீசன்களில் அசல் கோளாரு இதேபோல் நடந்துகொண்ட நிலையில், தற்போது ஜெஃப்ரியும் அந்த வகையில் மாறி வருவதாக கூறி வருகின்றனர். ஆரம்பத்திலேயே இதை மாற்றிக்கொண்டால் நல்லது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“