New Update
/indian-express-tamil/media/media_files/57yz942ecdmTIoXKhzPu.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் முதல் நாள் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்து யார் வெளியேற உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கிய முதல் நாளே பரபரபப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்து எந்த போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார் என்பது குறித்து பெரும் விவாதம் சமூகவலைதளங்களில் நடந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, விஜய் சேதுபதி 8-வது சீசனை தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரமோவும் வெளியானது. அதேபோல், இந்த ப்ரமோவில், விஜய் சேதுபதி செல்லும் இடமெல்லாம் அவருக்கு அட்வைஸ் கொடுப்பது போல், காட்சிகள் இருந்துது.
இதன் காரணமாக விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், முதல் நாளில் அனைவரும் வியக்கும் வகையில் யார் யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அதை அப்படியே செய்து காட்சி அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து முதல் நாள் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்தவுடனே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கிவிட்டதால், முதல் நாளிளேயே யாரும் எதிர்பார்க்காத வகையில், எலிமினேஷன் நடந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக, தொடக்கத்திலேயே சில அதிரடியான மாற்றங்கள் செய்வது வழக்கம். ஆனால் இதுவரை இல்லாத வகையில், முதல் நாளிலேயே சாச்சனா எலிமினேஷன் செய்யப்பட்டது பலரையும் ஆச்சயத்தில் ஆழ்த்தியது. முதல் நாள் ஒருவர் வெளியேறியதை தொடர்ந்து முதல் வாரத்தில் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான நாமினேஷன் பிரசஸ் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக்பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாமினேஷனில், சௌந்தர்யா. அருண் பிரசாத், முத்துகுமார், ரஞ்சித், ரவீந்திரன், ஜாக்குலின் ஆகியோர் சிக்கியுள்ளனர். இவர்களின் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், உடல்நிலை பாதிப்பில் சிக்கியுள்ள ரவீந்திரன் சந்திரசேகர் இதனை காரணம் காட்டி வெளியேறவும் வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.