/indian-express-tamil/media/media_files/2025/09/17/teju-ashwini-2025-09-17-15-04-55.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் யார் வருவார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதில் தான் போட்டியளராக பங்கேற்க உள்ளதாக நடிகை தேஜூ அஸ்வினி கூறியுள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிக்ழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. மேலும் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், 8-வது சீசனில் விலகிய நிலையில், 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் வந்தாலும், விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து 9-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் தான் பங்கேற்க உள்ளதாக நடிகை தேஜூ அஸ்வினி கூறியுள்ளார். குமுதம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இதனை உறுதி செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க இருக்கிறேன். 9-வது போட்டியாளராக உள்ளே போக இருக்கிறேன். ஆனால் என்ன காஸ்டியூம் என்பது குறித்து எனது ஸ்டைலிஸ் தான் சொல்ல வேண்டும். அங்கு கண்டிப்பாக நான் நடித்த சில பாடல்களை தொகுத்து நடனம் ஆடுவேன். கண்டிப்பாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 நாட்கள் இருப்பேன். இது ஒரு அனுபவமாக இருக்கும். 10 நாட்கள் இருந்து அங்கு என்னதான் இருக்கிறது என்பதை ஃபுல்லாக பாக்க வேண்டும்.
பிக்பாஸ் வீட்டுக்குள் போய்விட்டால், செல்போனிடம் இருந்து விலகி இருப்பேன். சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டாம். ஜாலியா மல்லாக்க படுத்துக்கொண்டு யோசிக்கலாம். இந்த மாதிரி ஒரு டைம் கிடைக்காது. பிக்பாஸ் போனவுடன், எப்படி இருக்கீங்க சார் என்னை ஞாபகம் இருக்கிறதா என்று விஜய் சேதுபதியிடம் கேட்பேன். 14 எனது பிறந்த நாள். அதனால் நான் 14-வது போட்டியாளராக இருக்கவே விரும்புகிறேன் என்றுஞ தேஜூ அஸ்வினி கூறியுள்ளார்.
இக்லோ, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்திருந்த தேஜூ அஸ்வினி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஷ்வின் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்த தேஜூ, தற்போது வெளியாகியுள்ள பிளாக்மெயில் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.