/indian-express-tamil/media/media_files/2025/08/14/biggboss-vjs-2025-08-14-21-20-12.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று ஜியோ ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி, கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். சமூக வலைதளம், சினிமா மற்றும் சின்னத்திரையில், பிரபலமான நபர்களை தேலுவு செய்து எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாத ஒரு வீட்டில் வைத்து நடத்தப்படும் இந்த கேம்ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகின்றனர்.
இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் போட்டியாளர்களிடம் பேசும் விதம், அவர்களுக்கு போட்டு காட்டும் குறும்படங்கள், மற்றும் அட்வைஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. இதன் காரணமாகவே வார இறுதி எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் குவிந்து வந்தனர். ஆனால் கடந்த 8-வது சீசனில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார்.
கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும், விஜய் சேதுபதியும், தனது தொகுப்பாளர் திறமையை நிரூபித்திருந்தார். இந்த சீசனில், முத்துக்கிருஷ்ணன் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அடுத்து 9-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் எப்போது தொடங்கும் என்பது பலரின் கேள்வியாக இருந்து வந்த நிலையில், ஜியோஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் குட்டி தந்தி டிவிக்கு அளித்த பிரத்யோக பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன், அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் முதல் மீண்டும் பிக்பாஸ்...
— Thanthi TV (@ThanthiTV) August 14, 2025
எதிர்வரும் சீசனும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என Jio Star-ன் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி#VijaySethupathi#BiggBoss9#biggbossseason9#ThanthiTVpic.twitter.com/E0oLrJGIy2
மேலும், 8-வது சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே அடுத்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து, இப்போதே உத்தேச பட்டியலை வெளியிட தயாராகி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.