Advertisment

லிவிங் லைஃப்-க்கு குட்பை... திருமணத்தில் இணையும் அமீர் - பாவனி : திருமணம் எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாவனி ரெட்டி வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீருடன் காதலில் விழுந்தார்.

author-image
WebDesk
New Update
Amer Bhavini

அமீர் - பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலில் விழுந்த அமீர் – பாவனி ரெட்டி இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து திருமண தேதியை அறிவித்துள்ளனர்.

Advertisment

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. .இந்த நிகழ்ச்சியில் காதலில் இணை ஜோடிகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் தங்களது காதலையும் முடித்துக்கொண்டனர். ஆனால் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாவனி ரெட்டி வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீருடன் காதலில் விழுந்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின் வெளியில் வந்த இவர்கள் ஜோடியாக ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் காதலர்களாகவே நடித்திருந்தனர். மேலும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இருவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வந்தால், திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதனிடையே தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இந்த ஜோடி வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வரும் நெட்டிசன்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment