சொகுசு கார் வாங்கிய வைரல் தம்பதி… சீரியல் நடிகையான பிக்பாஸ் பிரபலம்… டாப் 5 சீரியல் செய்திகள்

தற்போது ரவீந்திரன் தனது மனைவிக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சொகுசு கார் வாங்கிய வைரல் தம்பதி… சீரியல் நடிகையான பிக்பாஸ் பிரபலம்… டாப் 5 சீரியல் செய்திகள்

சொகுசு கார் வாங்கிய ரவீந்தர் மகாலட்சுமி தம்பதி

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தியில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் ஒருசிலர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனாலும் இதை தம்பதி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது ரவீந்திரன் தனது மனைவிக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார

சீரியல் நடிகையாக மாறிய பிக்பாஸ் பிரபலம்

செய்திவாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான அனிதா சம்பத் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனிதா சம்பத், தற்போது சீரியல் நடிகையாக களமிறங்கியுள்ளார். கலர்ஸ் தமிழின் மந்திர புன்னகை தொடரில் நாயகியின் தோழியாக முக்கிய கேரக்டரில் அனிதா சம்பத் நடிக்க உள்ளார்.

திருமணம் முடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நலல வரவேற்பு கிடைத்து வந்தாலும் கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் சீரியல் க்ளைமேக்ஸ் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் பாரதியின் தம்பி அகில் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சுகேஷ் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

40 வயதில் தாயான சீரியல் நடிகை

காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மண், கடந்த ஆண்டு டோஷ் கிரிஷ்டோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த சந்திரா தற்போது ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தற்போது 40 வயதானா சந்திராவுக்கு தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை சென்றுள்ள நட்சத்திர சீரியல் ஜோடி

தமிழ் சின்னத்திரையில் நடசத்திர தம்பதி ஆல்யா மானசா – சஞ்சீவ். தற்போது சஞ்சீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வரும் நிலையில், ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா பிரசவம் காரணமாக அதில் இருந்து விலகினார். தற்போது அவர் வேறு சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே சமீபத்தில் இலங்கை சென்ற ஆல்யா சஞ்சீவ் ஜோடி தாங்கள் இலங்கை சென்று சென்னை திரும்பியது வரை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil biggboss celebrity anitha sambath in colors tamil serial

Exit mobile version