கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் பாதிக்கப்பட்வர்கள் குறித்து பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் வெளியிட்டள்ள அறிக்கை விஜய் ரசிகர்கள் மத்தயில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .இது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு மாநில அரசின் மெத்தன போக்கே காரணம் என்ற நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் கடுமையாக விமர்சித்து நேற்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தொடர்ந்து நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற விஜய், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில். இந்த சம்பவத்தின் காரணமாக பலியானாகளின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கான காசோலையை பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினார்.
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை அனிதா சம்பத் இன்ஸ்டாகிராம பக்கத்தில் சட்டவிரோதமாக மது அருந்தி உயிர் இழந்தவர்களை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதில் நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்போ பயங்கரவாதிகளை எதிர்கொண்டு அவர்கள் நேருக்க நேர் தாக்கும்போது, குண்டு அடிப்பட்டு கவலைக்கிடமாக இருக்கிறார்கள் பாவம் என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
சில ஊடகங்கள் அவரது கருத்தை தவறாகப் புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்தது குறித்து தான் அனிதா சம்பத் விமர்சிக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் அனிதா சம்பத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இதனிடையே அனிதா சம்பத் தனது பதிவு குறித்து விளக்கம் அளித்து மறறொரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அனிதா எழுதியுள்ள பதிவில், "எனது பதிவு விஜய் பற்றி இல்லை, நான் அவரைப் பற்றி தவறாகப் பேசியதில்லை. உண்மையில் அவரது அரசியல் பிரவேசத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் தியாகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏழ்மையில் இருந்தபோதும் அவர்கள் பணம் எடுத்துக்கொண்டு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு, அவர்களின் மனைவி, குழந்தைகளை கவனிக்காமல், இருந்துள்ளனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 5 அல்லது 10 ரூபாய் கூட சேமிக்கும் எத்தனையோ பேர் உலகில் உள்ளனர். நம் நாட்டில் இப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்கும் போது, குடிப்பழக்கத்திற்கு பணம் செலவழிப்பவர்கள் தங்கள் குடும்பத்தை பொருட்படுத்தாமல் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.