Advertisment

சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் : எதிர்பார்ப்பில் ஜீ தமிழ் சீரியல்

வீட்டில் எல்லோரும் திருமாறனுக்காக காத்துக்கொண்டு இருக்க அப்போது திருமாறன் சாருமதியுடன் காரில் வந்து இறங்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது.

author-image
WebDesk
New Update
சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபலம் : எதிர்பார்ப்பில் ஜீ தமிழ் சீரியல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை பெற்ற ஜூலை ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த நிலையில், அவர் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகியள்ளார்.

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால்.  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த இந்த சீரியலில் ஜூலி கெஸ்ட் ரோலில் அறிமுகமாகி திருமாறன் மற்றும் ஆதிராவுக்கு முதலிரவை நடத்த ரிசார்ட் ஒன்றிற்கு அழைத்து சென்றிருந்தார்.

இந்நிலையில் அதே ரிசார்ட்டுக்கு சாருமதியை அழைத்து வரும் அகிலன் அவளை ஒரு கும்பலிடம் விற்று பணத்துடன் அங்கிருந்து எஸ்கேப் ஆக சாருமதி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறார். அவரை காபபாற்றும் திருமாறன் வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தான். இதனால் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்த சுவாரஷ்ய தகவல்கள் சில வெளியாகி உள்ளன.

அதாவது வீட்டில் எல்லோரும் திருமாறனுக்காக காத்துக்கொண்டு இருக்க அப்போது திருமாறன் சாருமதியுடன் காரில் வந்து இறங்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. சாருமதியை அகிலன் ஏமாற்றியதால் தற்கொலை முயற்சி வரை சென்று விட்டாள். இனி அவள் இங்கு தான் இருப்பா, அவளை யாரும் எதுவும் சொல்ல கூடாது என சாருமதியை வீட்டுக்குள் அழைத்து செல்கிறான். சாருமதியின் வருகை யாருக்கும் பிடிக்காமல் போகிறது.

இதனால் சாருமதி நான் தற்கொலை பண்ணிக்க போறேன் என சொல்ல மீண்டும் சாருமதிக்காக பேசுகிறான் திருமாறன். இப்படியான நிலையில் சாருமதி ஆதிராவிடம் இன்னும் கொஞ்ச நாளில் திருமாறன் வாயிலேயே உன்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல வைக்கிறேன் என சவால் விடுகிறாள். 

மறுபக்கம் அகல்யா சாருமதிக்கு எதிராக ஆதிராவை தூண்டி விட முயற்சி செய்கிறாள். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? சாருமதியின் சவாலை ஆதிரா எப்படி எதிர் கொள்ள போகிறாள்? என்பதை நோக்கியே கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதனிடையே பிக்பாஸ் ஜூலி இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் உள்ளே வந்துள்ளது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Julie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment