/indian-express-tamil/media/media_files/2025/08/22/cook-with-comalni-mohan-vaithiya-2025-08-22-16-07-10.jpg)
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், டான்சர் என பன்முக திறமையுடன் வலம் வரும் மோகன் வைத்தியா சொந்த வீடு இருந்தும், தான் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், தனது வீட்டுக்க வாடகை எவ்வளவு என்பது குறித்தும் ஹோம் டூர் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
1997-ம் ஆண்டு பிரேமி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான மோகன் வைத்தியா, காதலர் தினம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு, சேது படத்தில், அபிதாவின் மாமா கேரக்டரில் நடித்திருந்த மோகன் வைத்தியா, பரசுராம், அந்நியன், வேகம், பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வனிதா விஜயகுமார் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படததில் ஹாட் அங்கிள் கேரக்டரில் நடித்திருந்தார்.
திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், இவரது மனைவிக்கு காது கேட்காது வாய் பேச முடியாது. அதேபோல் அவரது மகனுக்கும் இதேபோன்ற ஒரு பிரச்னை இருக்கிறது. மருமகளும் இந்த நிலை தான் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மர்மதேசம் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள மோகன் வைத்தியா, விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றும், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். குக் வித கோமாளி நிகழ்ச்சியில் 3-வது வாரத்தில வெளியேறிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் 28 நாட்கள் வீட்டில் இருந்தார்.
இதனிடையே கலாட்ட பின்க் யூடியூப் சேனலில் ஹோம் டூர் வீடியோவில் பேசிய மோகன் வைத்தியா பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் மறந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் முன்னிலையில் பாடல் பாடியது, கிரிக்கெட் வீரர் தோனியுடன் செல்பி எடுத்துக்கொண்டது குறித்து பேசியுள்ள மோகன் வைத்தியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் எங்கள் சீசன் தான் பெஸ்ட், இதில் கோபம், அன்பு, காதல், அபக்ஷன் என அனைத்துமே இருந்தது. பிக்பாஸ் ஸ்கிரிப்ட் இல்லை. அதே சமயம் குக் வித் கோமாளி ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோ தான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாங்கள் செய்த அனைத்துமே ஸ்கிரிப்ட தான். உங்களை பார்க்க வைப்பதற்காக இப்படி செய்கிறார்கள். அதை யாரும் நம்பி விட வேண்டாம் அத்தனையும் பொய் தான். நன்றாக பார்த்து எஞ்சாய் பண்ணங்க என்ற சொல்லும் மோகன் வைத்தியா. தனக்கு இந்த வீடு பங்களா மாதிரி தான். இருப்பது நான் மட்டும் தான், சொந்த வீடு திருமுல்லைவாயிலில் உள்ளது. அந்த வீடு வாடகைக்கு இருக்கிறது. இந்த வீட்டில் நான் வாடகைக்கு இருக்கிறேன். மாதம் ரூ12 ஆயிரம் வாடகை கொடுப்பதாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.