பிக் பாஸ் வீட்டில் பாவனி- அபினய் காதலா? அபினய் மனைவி ரீயாக்ஷனைப் பாருங்க!

Tamil Biggboss Update : பிக்பாஸ் 5-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், வார இறுதியில் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Tamil Biggboss Contestant Abhinay Wife Post Viral : விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மதல் ஒளிபரப்பாகி வரும் இந்ந நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. வழக்கமாக கடந்த சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்த வாரத்தில் இருந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 5-வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், வார இறுதியில் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்த போது, நடிகர் ராஜூ, அபிநய்யிடம் நீங்கள் பவானியை காதலிக்கிறிங்களாக என்று கேட்டார். அவரின் இந்த கேள்வி ரசிகர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய அளவிலும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமான அபிநய் மனைவி அபர்ணா அபிநய் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாளில் இறுதியில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு தெரியும். மறறவர்களுக்கு தெரியாது நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று. அபர்ணா அபிநய் எப்போதும் உங்களுடன் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil biggboss contestant abhinay wife post viral update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com