Advertisment
Presenting Partner
Desktop GIF

பாண்டிச்சேரி ரிசார்ட்; நீச்சல் குளம்; தூக்கலான கவர்ச்சியில் ஜோவிகா புது போட்டோஸ்

சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஜோவிகா அவ்வப்போது போட்டோஷூட்கள் செய்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Jovika Vijayakumar124

ஜோவிகா விஜயகுமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜோவிகா விஜயகுமார் தற்போது பாண்டிச்சேரி ரிசார்ட்டில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரின் வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தாலும், அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில்திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்ற இவர்டிவி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சாம்பியனான வனிதா விஜயகுமார்பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வனிதாவை போல் அவரது மகள் ஜோவிகாவும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கோவிகா போட்டியாளராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சி அவருக்கு வரவேற்பை கொடுத்திருந்தாலும், பிரதீப்-க்கு ரெட் கார்டு கொடுத்ததுபடிப்பு தொடர்பாக விசித்ராவுடன் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 105 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 63-வது நாளில் ஜோவிகா வெளியேற்றப்பட்டார். தற்போது சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஜோவிகா அவ்வப்போது போட்டோஷூட்கள் செய்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தொடர்பான பதிவுகளை வெளியிட்டு அசத்தி வருகிறார். 

அந்த வகையில் தனது மகள் ஜோவிகாவின் போட்டோஷூட் தொடர்பான வீடியோவை வனிதா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். பாண்டிச்சேரியில், ரிசார்ட்டில் நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த புகைப்படங்கள் அனைத்திருமே ஜோவிகா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வனிதா தனது மகளின் வாழ்க்கையை வீணடிக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஜோவிகாவுக்கு ஆதரவாக கருத்தும் வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jovika Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment