scorecardresearch

‘லவ் பிரேக் அப் ஆயிடுச்சு… ஆனா இப்பவும் ஃப்ரண்ட்ஸ்..!’ இவங்ககிட்ட பாடம் படிங்கப்பா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள நிரூப் தானும் யாஷிகாவும் ஏன் பிரிந்தோம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘லவ் பிரேக் அப் ஆயிடுச்சு… ஆனா இப்பவும் ஃப்ரண்ட்ஸ்..!’ இவங்ககிட்ட பாடம் படிங்கப்பா!

Biggboss Niroop Explained Why Breakup to yashika : தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த், தொடர்ந்து துருவங்கள் பதினாரு, பாடம் உள்ளிட்ட சில பட    ங்களில் நடித்த இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளான யாஷிகா தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இவரது நெருங்கிய நண்பரான பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ல் கலந்துகொண்டு இறுதிசசுற்றில் 2-வது இடம் பிடித்தார். தொடர்ந்து சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில், யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் நந்தகுமார் கலந்து கொண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.

ஆறடி உயரம், நீண்ட தலைமுடி என பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான லுக்கில் கவனம் ஈர்த்த நிரூப், தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த உடனே தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் யாஷிகாதான் என்று கூறினார். மேலும் தான் யாஷிகாவின் முன்னாள் காதலன் என்றும், தங்கள் இருவரும் இப்போது பிரிந்துவிட்டு நண்பர்களாக தொடர்வதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்றுவரை சென்ற நிரூப் 5-வது இடம் பெற்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள நிரூப் தானும் யாஷிகாவும் ஏன் பிரிந்தோம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் நானும யாஷிகாவும் காதலித்து வந்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. இதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம் தற்போது இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். விபத்தில் சிக்கி ஓய்வெடுத்து வந்த யாஷிகா உடல்நலம் தேறி நிரூப்பை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஒருமுறை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நேரலையில் ரசிகர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, சடனாக என்ட்ரி கொடுத்த நிரூப், யாஷிகாவுக்கு லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது, இவர் லிப் கிஸ் கொடுத்த வீடியோவை நெட்டிசன்கள் வலைதளங்களில் பரப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil biggboss contestant niroop explained why breakup to yashika