பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி ஒற்றை போட்டோவின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந தேதி தொடங்கியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை, தானாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற முதல் வாரம் முடிவில் 16 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
இதனால் 2-வது வாரம் எலிமினேஷன் இல்லாத நிலையில், 3-வது வாரம் முதல் வார கேப்டனாக விஜய் வர்மா வெளியேற்றப்படடார். தொடர்ந்து கடந்த வாரம் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் நிகழ்ச்சியின் உள்ளே வந்த நிலையில், யுகேந்திரன் மற்றும் விணுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டது. மேலும் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் அவர்களின் முதல் வாரத்திலேயே ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதனிடையே 5-வது வார இறுதியான நேற்று முன்தினம், மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வந்த பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் உள்ள யாருக்கும் அவரை பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் இருந்து மக்களின் சப்போர்ட் அவருக்கு இருந்ததால், தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். ஆனால் அவரால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்று கூறிய மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்ட சிலர் உரிமை குரல் எழுப்பினர்.
/indian-express-tamil/media/media_files/gQO00yS7WrcmrelOmsBe.jpg)
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளரையும் தனியாக அழைத்து பிரதீப் இந்த வீட்டில் தொடரலாமா அல்லது வெளியேற்றலாமா என்று கேட்டார். இதில் பலரும் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இறுதியாக கண்ஷப்ஷன் அறைக்கு வந்த பிரதீப்பிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று சண்டை போட வேண்டாம். இப்படியே வெளியில் வாருங்கள். உங்கள் லக்கேஜ் உங்களுக்கு வரும் என்று சொல்லிவிட்டார்.
/indian-express-tamil/media/media_files/aPWBdVDis5Dd85uedqtW.jpg)
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிரதீப் ஆண்டனி, என்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று கேட்கும் வகையில், பெண்களுக்கு மத்தியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கொடுத்த ரெட் கார்டுடன் போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தனக்கு கிடைத்த பொருட்களை வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“